Home சமையல் குறிப்புகள் மீன் ரோஸ்ட்

மீன் ரோஸ்ட்

18

தேவையானவை:

மீன் – 2 பெரிய துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
சோம்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை:

மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும்.
தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும்.
இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.
இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.
குறிப்பு:
மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டு தூள் தூவி இறக்கினால் இன்னும் சுவை கூடும்.
அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.
இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.