Home சமையல் குறிப்புகள் பாதம் மசாலா மில்க்

பாதம் மசாலா மில்க்

76

masala-paal-spiced-milk.640x480இருமல் சளி தொண்டை வலி எல்லாம் வருமுன் காக்க ஒரு அருமையானபானம் இந்த மசாலா மில்க். அதாவது அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு வாரம் ஒரு முறை இதை காய்ச்சி குடித்து வந்தால் ஓரளவுக்கு குணம் பெறலாம்.

தேவையானவை பால் – ½ லிட்டர் + ½ லிட்டர் சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் – 4 கிராம்பு – 4 பட்டை 1 அங்குல துண்டு 2 மிளகு – 15 எண்ணிக்கை மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி சாப்ரான் – ½ தேக்கரண்டி பாதாம் – 100 கிராம் முந்திரி – 25 கிராம்

செய்முறை

முந்திரியை 5 நிமிடம் ஊறவைக்கவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோலெடுக்க்கவும் . பாதம் முந்திரி சாப்ரான் முன்றையும் நன்கு மையாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலுடன் அரைத்த பாதம் கலவையை சேர்த்து காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் மிளகு, பட்டை ,கிராம்பு,லவங்கம்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலாக்கள் நன்கு பாலில் இரங்கும் வரை பாலை கால் லிட்டர் ஆகுவரை தீயின் தனலை குறைவாக வைத்து கொதிக்க விடவும். சிறிது வற்றியதும் மற்றொரு அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் பாதம் பாலுடன் வடிகட்டி சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும். டிப்ஸ்: சளி இருமலுக்கு இந்த மசாலா மில்க் அருமையான மருந்து ஓவ்வொரு தடவை குளிர்காலம் ஆரம்பிக்கும் போதும் அனைவரையும் கடுஞ்சளி தாக்கும், இந்த முறை குளிர் சீசன் ஆரம்பித்த்தும் இதை தான் வாரம் ஒரு முறை செய்து குடித்தோம் , எங்க வீட்டில் இம்முறை யாருக்கும் அதிக இருமல் சளி பிடிக்கவில்லை. இந்த பாதம் பால் காய்ச்ச கொஞ்சம் பொறுமை தேவை. பாதாம் பால் அதிக தீயில் வைத்தால் பொங்கி விடும். அப்ப அப்ப கிளறி விடனும். மசாலாசேர்த்து கொதிக்க வைக்கும் போது குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடனும் அப்பதான் சாறு நல்ல இரங்கும். . மிளகை ஒன்றிரண்டாக நல்ல தட்டி போட்டால் இன்னும் எஃபக்டாக இருக்கும். தொண்டைகர கரப்புமற்றும் புறையேறுதலுக்கு