Home இரகசியகேள்வி-பதில் பணத்துக்காக தேடிவரும் உறவுகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

பணத்துக்காக தேடிவரும் உறவுகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

189

bhabhi-bedroom-sex-saree-removed-299x224tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,இசபெல் தனது காதல் கதையை சொல்லச்சொல்ல நிச்சயமாக அது சமூகத்திற்கு ஒரு பாடம் போன்று தான் எனக்கு தோன்றியது.

இப்போது அவளுக்கு 35 வயது. 17 வயதில் காதல் வசப்பட்டிருக்கிறாள். சமூகத்தைப் பற்றி, வாழ்க்கையை பற்றி எதுவும் புரியாத 18 வயதில், 32 வயது காதலனோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள்.

‘‘என் பெற்றோர் என்னை மீட்க எவ்வளவோ போராடினார்கள். ரவுடிகளை வைத்து மிரட்டிப் பார்த்தார்கள். போலீசை வைத்து பேசிப்பார்த்தார்கள். என் அம்மா என்னிடம் உருகி மன்றாடிப் பார்த்தார். அப்போது எனது இதயம் கல்லாகி இருந்தது. பிறந்த வீட்டில் உள்ள அனைவரையும் தூக்கி வீசிவிட்டு காதலரோடு சென்றேன். காதலரின் வீட்டில் எங்களை ஏற்று அவசர திருமணம் நடத்தி வைத்தார்கள். அன்றிலிருந்து என் வாழ்க்கை நரகமானது’’ என்றாள்.

இசபெல் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவள். காதலன் குடும்பம் வசதி, வாய்ப்பற்றது. ‘திருமணமான சில மாதங்களிலே அவள் மீதான கோபம் குறைந்து பெற்றோர் அவளைத் தேடிவந்து சொந்தம் கொண்டாடு வார்கள். அதன் பிறகு அவளுக்குரிய சொத்துக்கள் எல்லாம் தன்னை தேடிவரும்’ என்று அந்த காதல் கணவன் நினைத்திருக்கிறான். ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை. அவளது பெற்றோர் அவளை தேடி வரவே இல்லை.

‘‘என் பெற்றோர் என்னை தேடி வராததால் ஆத்திரம் அடைந்த என் கணவர் என்னை அடித்து உதைத்து, ‘அம்மா வீட்டிற்கு போ! உரியதை வாங்கி வா!’ என்றார். நான் அதற்கு உடன்படவில்லை. அந்த நிலையில் நான் கர்ப்பமானேன். அதனால் என் கணவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். ‘பேரக்குழந்தை பிறந்ததும் எனது பெற்றோர் தேடிவந்து விடுவார்கள். என்னை சேர்த்துக்கொண்டு சொத்துக்களை பிரித்து தந்து விடுவார்கள்’ என்று என் மாமனார் குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். அந்த பத்து மாதங்களும் என்னை சந்தோஷமாக பார்த்துக்கொண்டார்கள். நான் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தேன்.

மாதங்கள் பல கடந்தும் என் பெற்றோர் என்னை வந்து பார்க்கவில்லை. அதனால் கடுங்கோபமடைந்த என் கணவர் இரண்டு குழந்தைகளோடு என்னை வீட்டைவிட்டு துரத்தினார். ‘அம்மா வீட்டிற்கு போய் சொத்தை வாங்கிவிட்டு வா’ என்றார்.

‘‘நானும் வேறு வழியில்லாமல் குழந்தைகளோடு தாய் வீடு போனேன். என்னை பார்த்ததும் என் அப்பா, அம்மா, தம்பிகள் அனைவரும் வீட்டை பூட்டிக்கொண்டு ஊரை விட்டே போய்விட்டார்கள். நாலைந்து நாட்கள் என் தாய் வீட்டின் முன்னால் நடுத்தெருவில் காத்துக் கிடந்தேன். பெற்றோர் வீடு திரும்பவில்லை. என் கணவரும் என்னை வந்து அழைத்துச் செல்லவில்லை’ என்றபோது கட்டுப்பாட்டை இழந்து இசபெல் அழுதாள்.

உறவுகள் அனைத்தும் போலியானவை என்பதை உணர்ந்த அவள், அன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறாள். இன்று அவளும் நகரத்தில் குறிப்பிடத்தக்க பெண் தொழில் முனைவோர். பெயர், புகழை சம்பாதித்ததோடு பல பெண்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறாள்.

‘எப்படி ஏற்பட்டது இந்த மன உறுதி…? இவ்வளவு அசுர வளர்ச்சி எப்படி சாத்தியமாயிற்று…?’– இசபெல்லிடம் கேட்டேன்.

“இருதலைக்கொள்ளி எறும்பாக நான் நடுத்தெருவில் தவித்தபோது எனக்கு ஞானோதயம் கிடைத்தது என்று சொல்லலாம். என் தோழி ‘மெஸ்’ ஒன்று நடத்தி வந்தாள். அங்கு போய் சேர்ந்தேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். நாங்கள் தயாரித்த உணவுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவள் என்னை தொழில் பார்ட்னர் ஆக்கிக்கொண்டாள். அடுத்து என்னிடமே நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டாள்’’ என்று சொன்னபோது போராடி வாழ்க்கையில் உயர்ந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்பட்டது.

‘இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.

‘‘300 பேருக்கு மேற்பட்டவர்கள் என் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்துவிட்டார்கள். நான் வசதி, வாய்ப்போடு வாழ்ந்து வருகிறேன். இந்த தருணத்தில் என் பெற்றோர், தம்பிகள் என்னைத் தேடி வருகிறார்கள். என்னை கை கழுவிய கணவரும் வந்து சொந்தம் கொண்டாடுகிறார். என்னிடம் இருக்கும் பணத்தையும், புகழையும் பங்குபோடவே இரண்டு தரப்பினரும் தேடி வருகிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. அவர்களை நான் எப்படி கையாள வேண்டும்?’’ என்று கேட்டாள்.

‘அவர்கள் பணத்துக்காகத்தான் உன்னோடு நெருங்கி வருகிறார்கள் என்பது உனக்கு புரிந்துவிட்டதால் அவர்களை நீ கையாள்வது எளிது. பாசப் பெருக்கில் உன்னை தடுமாற வைக்கவோ, கண்கலங்க வைக்கவோ அனுமதி அளிக்காதே. அவர்களை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டுமோ அவ்வளவு தூரத்தில் வை. ஆனால் அவர்களுக்கு நீ என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அதை எந்த குறையும் இல்லாமல் செய். உன் முழு கவனமும் தொழில் மீதும், குழந்தைகள் மீதும் இருக்கட்டும். அதே நேரத்தில் வெறித்தனமாக உழைப்பதற்கு பதில் ரசித்து உழைக்க வேண்டும். பணம் சம்பாதித்துதான் ஆகவேண்டும் என்று போராடாமல், வாழ்க்கையை அனுபவித்தபடியே தொழிலை செய். மனதுக்காக, உன் உடலுக்காக, உன் மகிழ்ச்சிக்காக, உன் ஆத்ம திருப்திக்காக, உன் பொழுதுபோக்குக்காக நேரத்தை ஒதுக்கு. நீ நிம்மதியாக வாழவேண்டியது மிகஅவசியம்’ என்றேன்.

தனிப்பட்ட முறையில் அவளுக்கு வேறு சில விஷயங்களில் ஆலோசனைகள் தேவைப்பட்டன. அதில் அவளுக்கு தெளிவாக வழிகாட்டப்பட்டது.

இப்போது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படும் பல பெண்கள் போராடி வாழ்க்கையில் ஜெயிக் கிறார்கள். ஜெயித்த பின்பு நிறைய பெண்களுக்கு இது போன்ற வாழ்வியல் நெருக்கடி ஏற்படுகிறது. அவர்கள் தெளிவாக இல்லாவிட்டால் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள்.

தொழிலில் ஜெயித்தால் மட்டும் போதாது. சொந்த வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும்.