Home குழந்தை நலம் நாம் பிறக்கும் போது அறுக்கப்படும் தொப்புள் கொடி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நாம் பிறக்கும் போது அறுக்கப்படும் தொப்புள் கொடி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

24

captureபெண்ணாக இருந்தாலும் சரி, பெண் விலங்காக இருந்தாலும் சரி கருவுற்றிருக்கும் சமயத்தில் கருப்பையினுள் நச்சுக்கொடி ஒன்று உருவாகி, குழந்தை பிறக்கும் வரையிலும் அந்த கொடி வழியாகத் தான் குழந்தைக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் சென்று சேர்கிறது.

கருவில் உள்ள குழந்தையின் தொப்புளில் தாயின் வயிற்றில் உருவாகும் நச்சுக் கொடி இணைக்கப்பட்டிருக்கும்.

குழந்தையினுடைய உயிர்ப்பாதை வழியாக, குழந்தை உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று, ரத்தம், ஊட்டச்சத்தக்கள் அத்தனையும் இந்த தொப்புள் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்று சேர வேண்டும்.

அந்த தொப்புள் கொடியானது ஒரு இன்ச் அளவு மட்டுமே இருக்கும். அகலம் ஒரு இன்சை விடவும் குறைவாகவே இருக்கும்.

அதுவரையிலும் தாயிடமிருந்து தேவையான அனைத்தையும் குழந்தைக்கு்க கொடுத்துக் கொண்டிருநு்த அந்த உயிர்க்கொடியானது குழந்தை பிறந்த பின்பு அறுத்து எடுக்கப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு, குழந்தையின் வயிற்றிலிருந்து சில அங்குலங்கள் விட்டு கொப்பூழ் கொடி வெட்டி எடுக்கப்படும்.

இப்படி வெட்டும்போது அதனால் வலி ஏதும் உண்டாவதில்லை. ஏனென்றால் தொப்புள் கொடியில் நரம்புகள் ஏதும் கிடையாது. அதனால் வலி உண்டாகாது. இதுவரை தாயின் நச்சுக்கொடி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. குழந்தை பிறந்த பின் அது தானாகவே மூச்சை இயக்கி, சுவாசித்துக் கொள்ளும்.