Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நரம்புகளை வலுவடையச் செய்யும் நௌலிக்கிரியா

நரம்புகளை வலுவடையச் செய்யும் நௌலிக்கிரியா

45

செய்முறை : தொடக்கத்தில் தட்சிண நௌலியானது சிறிது சிரமமாக தோன்றும். ஆனால் இடுப்பு பகுதியை சிறிது வளைத்து இதனை செய்வதன் மூலம் எளிதாக வந்து விடும். இது போல் நௌலிக்கிரியா என்ற ஒரு பயிற்சியும் உண்டு.

அதாவது, அலைகளைப் போல் வயிற்று சதைகளை அடிவயிற்றிலிருந்து மேல் வயிற்றுக்கும், மேல் வயிற்றிலிந்து அடிவயிற்றுக்கும் படிப்படியாய் மடித்தாற் போல் செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மூச்சை சாதாரணமாக உள் இழுக்கவும், வெளிவிடவும் செய்யலாம்.

குறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலியை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.

பலன்கள்: நௌலியின் பலன் அதிசயிக்கத்தக்கது. இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும்.

நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.