Home வீடியோ தாய்பாலை நிறுத்த வேண்டுமா? எப்படி நிறுத்தலாம்

தாய்பாலை நிறுத்த வேண்டுமா? எப்படி நிறுத்தலாம்

39

குழந்தை பிறந்த 1 வருடத்திலேயோ, 2 வருடத்திலேயோ தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி நிறுத்திவிடுவார்கள்.
தற்போது மார்பகங்களில் சுரக்கும் தாய்பாலையும் நிறுத்த வேண்டும். எப்படி தாய்பாலை நிறுத்தலாம் என சில குறிப்புக்கள்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், வேப்பிலைகளை ஸ்தனங்களில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். மல்லிகைப்பூவையும் வைத்துக் கட்டலாம்.

இவ்வாறு செய்தால் பால் சுரப்பது நிற்பதுடன் வலியும் குணமாகும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் சுரந்து விடும்.

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும்.

வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும்.