Home சூடான செய்திகள் தாம்பத்திய உறவை ஒரு வாரம் தள்ளிப் போடுங்கள்! அப்புறம் நடக்கிறதா பாருங்க…!!

தாம்பத்திய உறவை ஒரு வாரம் தள்ளிப் போடுங்கள்! அப்புறம் நடக்கிறதா பாருங்க…!!

24

தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல். கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை.

ஆனால் எங்கோ பிழை நேரும்போது உறவில் சிக்கல் தோன்றுகிறது.மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையானவர்களாக இருக்க முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தேவையில்லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது.

இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது. திருமணத்திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள்.

இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது. அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கைகளினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இதுவே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது.

திருமணத்திற்கு முன் பெண்கள் கொண்ட உறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்குகிறது. வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்க்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..!

டெய்ல் பீஸ்:

வட இந்தியாவில் உள்ள சில மாநிலக் கிராமங்களில் முதலிரவு அன்றே “புது மனைவியுடன் உறவு கொள்ளாதே” என்று கூறி அனுப்புகிறார்கள்.

இதற்கு காரணம் ஒருவாரம் இரவு முழுக்க பேசுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஒருவர் விருப்பம் இன்னொருவருக்கும் தெரியவும், ஒரு நல்ல நட்பு உருவாகவும், செக்ஸ் பற்றி பேசி அதில் ஒரு அறிதல் உருவாகவும், சின்ன சின்ன சீண்டல்களில் செக்ஸ் பற்றிய பயத்தைப் போக்கவும் இந்த ஒரு வாரம் பெரிதாக உதவும் என்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் உண்மைதான்..!!