Home பெண்கள் அழகு குறிப்பு தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

24

தலைக்கு-குளிக்கும்-போது-கவனிக்க-வேண்டியவைகுளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.
தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும். மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர்.
எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள்.
நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதை தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.