Home சூடான செய்திகள் செல்லமா கடிச்சு விளையாடும் காதலர்களா நீங்கள்..? அப்ப இந்த 7 விஷயம் தெரிஞ்சுக்குங்க!!!

செல்லமா கடிச்சு விளையாடும் காதலர்களா நீங்கள்..? அப்ப இந்த 7 விஷயம் தெரிஞ்சுக்குங்க!!!

31

லவ் பைட்டா? அப்படினா என்ன? என்று கேள்வி கேட்கும் நபர்களும் இருக்கலாம்.

சிலர் இதுவரை இதை ட்ரை செய்யாதவர்களாக இருக்கலாம், சிலர் இதை தினந்தோறும் செய்து வந்தும், இதன் பெயர் மற்றும் இதுகுறித்த தாக்கங்கள் அறியாதவர்களாக இருக்கலாம்.

செல்லமாக கடிப்பது தான் லவ் பைட். கழுத்து, தோள்ப்பட்டை, காது, நெஞ்சு போன்ற இடங்களில் காதலர்கள், கணவன், மனைவி கொஞ்சி குலாவும் போது செல்லமாக கடித்து விளையாடுவது சகஜம்.

ஆனால், இதன் தாக்கங்கள் அப்படி சகஜமாக எடுத்துக் கொள்ள முடியாது. லவ் பைட் காரணமாக இறந்த நபர்களும் இருக்கிறார்கள்.

அப்படி என்னய்யா இது? என அறிந்துக் கொள்ள நினைப்பவர்கள், இந்த 7 உண்மைகளை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்…

ஓரல் ஹெர்ப்ஸ்!
ஹெர்ப்ஸ் என்பது ஒரு பால்வினை நோய், இது வாய் பகுதியில் ஏற்படும் தொற்று. ஒருவேளை உங்கள் துணைக்கு இந்த ஹெர்ப்ஸ் தொற்று இருந்து, அவர் உங்களுக்கு லவ் பைட் கொடுத்தால், அந்த இடத்தின் சருமத்தில் சரும கிழிசல் ஏற்படலாம். இது உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

குணப்படுத்த முடியாது!
லவ் பைட்டின் போது ஏற்படும் சிறு சிறு காயங்கள், குறி தடயங்கள் ஐஸ் வைத்ததால் மறைந்துவிடும். ஆனால், ஆழமாக ஏற்படும் காயங்களை குணப்படுத்த முடியாது, வேண்டுமானால் உங்கள் உடையை அட்ஜஸ்ட் செய்து மறைத்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ரோக்!
ஹிக்கீஸ் எனப்படும் இந்த லவ் பைட் மூலமாக ஸ்ட்ரோக் ஏற்படுமா? என நீங்கள் வியக்கலாம். ஆனால், 2011ல் ஒரு பெண் லவ் பை மூலமாக ஸ்ட்ரோக் ஏற்பட்டு ஒருப்பக்கம் பக்கவாதம் உண்டாகி, இடது கை இயக்க முடியாத நிலைக்கு ஆளானார். இது வரை லவ் பைட் மூலமாக ஸ்ட்ரோக் உண்டானதாக பதிவான ஒரே நபர் இவர் தான்.

தழும்புகள்!
லவ் பைட்ஸ் மூலம் ஏற்படும் சில தழும்புகள் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கூட நீடிக்கலாம். இது அவரவர் உடல் நிலை சார்ந்தது. எதுவாக இருந்தாலும், லவ் பைட் என்ற பெயரில் ஆழமாக கடித்துவிட வேண்டாம். இதனால் இன்பெக்ஷன் ஆகவும் வாய்ப்புகள் உண்டு.

காயங்கள்!
நமது சருமத்தின் கீழே இரத்தத் தந்துகிகள் எனப்படும் நுண்குழாய்கள் இருக்கும். இவை மிகவும் சிறிய இரத்த நாளங்கள். இதில் வலுவாக அடிப்பட்டால் அதிக வலி ஏற்படும். இதனால் காயங்கள் உண்டாவது சருமத்தின் மேற்புறத்தில் நாம் காண இயலும். இரத்தம் வராத போதிலும், அடிப்பட்ட இடத்தில் சிவந்து போவது, அங்கு வலி ஏற்படுவது எல்லாம், அந்த சிறிய இரத்த நாளங்களில் ஏற்படும் தாக்கம் தான்.

இரும்புச்சத்து!
உங்கள் துணை எத்தனை லவ் பைட் கொடுத்தும், உறிஞ்சி எடுத்தும் அந்த இடத்தில் ஒரு தடயம் அல்லது மார்க் விழவில்லை என்றால், உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கலாம். ஒருவேளை, லவ் பை கொடுத்த இடத்தில் கருப்பு அல்லது நீல நிற குறிகள் ஏற்பட்டால் அது அபாயத்தை குறிக்கும் அறிகுறி. இதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது.

பிற உயிரினங்கள்!
இது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி, மற்ற விலங்குகள், பறவைகள் இடமும் நாம் காண இயலும். எனவே, லவ் பைட் என்பது எல்லா உயிரினங்கள் மத்தியிலும் இயல்பான ஒன்று.