Home சமையல் குறிப்புகள் சூப்பரான பன்னீர் – பச்சைப்பட்டாணி குருமா

சூப்பரான பன்னீர் – பச்சைப்பட்டாணி குருமா

26

captureதேவையான பொருட்கள் :

பன்னீர் – 200 கிராம்
பச்சைப் பட்டாணி – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1 பெரியது
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
புதினா – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கு

அரைக்க :

தேங்காய் பத்தை – 3
கசகசா – ஒரு டீஸ்பூன்
முந்திரி – 10 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

தாளிக்க :

எண்ணெய்
கிராம்பு – 3
பட்டை – சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம் – 4 (வாசனைக்கு)

செய்முறை :

* பச்சைப்பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட‌வும்.

* வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..

* இஞ்சி, பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

* பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்த பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

* பிறகு வெங்காயம், தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கவும்.

* அடுத்து பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் வதக்கிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

* மற்றொரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பன்னீரை போட்டு லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

* குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

* குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய், கசகசா, முந்திரி அரைத்த விழுதை குருமாவில் சேர்க்கவும்.

* எல்லாம் சேர்ந்து கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எலுமிச்சை சாறு, கொத்துமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

* சூப்பரான பன்னீர் – பச்சைப்பட்டாணி குருமா

* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்.