Home சமையல் குறிப்புகள் சுவையான டயட் லட்டு ரெடி!

சுவையான டயட் லட்டு ரெடி!

22

imagesதேவையானபொருட்கள்
டேட்ஸ் – அரை கப்
புரூன்ஸ் – கால் கப்
உலர்ந்த ஆப்ரிகாட் – கால் கப்
டூட்டி ஃப்ரூட்டி – கால் கப்
விரும்பிய நட்ஸ் – முக்கால் கப்
செய்முறை:
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அனைத்து பழங்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
மைக்ரோவேவில் நட்ஸ் வகைகளை மட்டும் 30 நொடிகள் வைத்து டோஸ்ட் செய்யவும். (அல்லது) வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு டோஸ்ட் செய்த நட்ஸ் வகைகளை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய டேட்ஸையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு நாண் ஸ்டிக் தவாவில் அரைத்த டேட்ஸ் மற்றும் மீதமுள்ள ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளைப் போட்டு கரண்டியால் கலந்து விடவும்.
அதனுடன் பொடித்த நட்ஸ் வகைகளைச் சேர்த்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தது போல் வந்ததும் வேறோரு பாத்திரத்தில் மாற்றி லட்டுகளாகப் பிடிக்கவும். கையில் ஒட்டுவது போன்றிருந்தால் சிறிது தேங்காய் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ளலாம்.
சத்தான நெய் சேர்க்காத டிரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் லட்டு தயார்.