Home சமையல் குறிப்புகள் சுவையான ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி ரெடி!

சுவையான ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி ரெடி!

35

06-1425644945-strawberry-smoothieதேவையானப் பொருட்கள்
ஆப்பிள் – ஒன்று
ஸ்ட்ராபெர்ரி – 10
தேன் – 2 தேக்கரண்டி (சுவைக்கேற்ப)
ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் – ஒரு கப்
செய்முறை:
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரியுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய ஆப்பிளைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அத்துடன் தேன் மற்றும் ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் சேர்த்து அரைக்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி அரைத்தெடுத்து, 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுக்கவும்.
டேஸ்டி ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி ரெடி. ஒரு கிளாஸில் ஊற்றிப் பரிமாறவும்.