Home சமையல் குறிப்புகள் சாமை சாம்பார் சாதம்

சாமை சாம்பார் சாதம்

26

தேவையான பொருட்கள்:
download (2)
சாமை அரிசி – 4 கப்,
பீன்ஸ், கேரட் – தலா 250 கிராம்,
கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு – தலா ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
முருங்கைக்காய் – 2,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

• காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.

• துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும்.

• காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.

• ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். • அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.

• நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.