Home சமையல் குறிப்புகள் சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

35

Captureதேவையான பொருட்கள் :

சாதம் – 2 கப்
வெங்காயம் – 2
சிறிய குடைமிளகாய் – 3 (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயம், குடை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் போன்றவற்றை வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து, கரம் மசாலாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய பின் குடைமிளகாய் மற்றும் உப்பை போட்டு குடைமிளகாய் அரை பதம் வரை வதக்கவும். குடை மிளகாய் நன்றாக வெந்தால் நன்றாக இருக்காது.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

* பிறகு அதில் சாதத்தை கலந்து மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* இப்போது சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!

* இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.