Home சமையல் குறிப்புகள் கோழி பிரியாணி

கோழி பிரியாணி

58

தேவையான பொருட்கள்:
பிரியாணி வகைகளில் நாட்டுக் கோழி பிரியாணியின் ருசியே தனிதான்.
இதெல்லாம் தேவை
பாசுமதி அரிசி – 1 கிலோ
சுத்தம் செய்த நாட்டுக் கோழி – 2 கிலோ
இஞ்சி – 100 கிராம்
பூண்டு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 25
தக்காளி – 250 கிராம்
வெங்காயம் – 250 கிராம்
கொத்து மல்லி – அரை கட்டு
புதினா – அரை கட்டு
நெய் – 250 கிராம்
பட்டை ,இலவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய் – 15 கிராம்
தயிர் – 200 கிராம்
தயார் செய்யும் முறை:
முதலில் கோழியை நன்கு கழுவிக் கொள்ளவும்.
பின்னர், இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயையும் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெய்யை இரு பாகமாக பிரித்துக் கொண்டு, ஒரு பாகம் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காய விட வேண்டும்.
அதில், அரைத்த பச்சை மிளகாயைப் போட்டு 5 நிமிடம் வதக்கி பின்னர் கோழியைப் போட்டு 5 நிமிடம் வதக்கியதும் அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து கிளறவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன்பின் மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி நெய்யை ஊற்றி, காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய் தட்டி போட்டு, பிரிஞ்சி இலையையும் அதனுடன் சேர்க்கவும்.
பின்னர் அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, புதினா, மல்லி தழை ஆகியவற்றை போட்டு மீண்டும் வதக்கவும்.
பின்னர், ஊறவைத்த கறியை நன்றாக கிளறி குக்கரில் வைத்து மூடவும்.
ஆவி வந்ததும் வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும், தீயை மெதுவாக எரியவிடவும்.
பத்து நிமிடம் கழித்து தீயை அணைத்த பிறகு சாதத்தை தனியாக குக்கரில் வடித்து, ஏற்கனவே தயாராக உள்ள கறியுடன் கலந்தால் நாட்டுக் கோழி பிரியாணி தயார்.