Home சமையல் குறிப்புகள் கோதுமை கேரட் அடை

கோதுமை கேரட் அடை

26

கோதுமை-கேரட்-அடைதேவையான பொருட்கள் :

முழு கோதுமை – 200 கிராம்
பச்சரிசி – 150 கிராம்
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய்- 12
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
துருவிய கேரட், முட்டை கோஸ் – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• முழு கோதுமையை 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

• பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

• இவற்றை ஊறிய கோதுமையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

• அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், சீரகம், துருவிய கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை அடையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

• தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.