Home குழந்தை நலம் குழந்தையை குளிக்க வைக்க என்ன சோப் பயன்படுத்தலாம் ..

குழந்தையை குளிக்க வைக்க என்ன சோப் பயன்படுத்தலாம் ..

25

201604021317062426_What-soap-used-to-take-a-bath-with-baby_SECVPFகுழந்தை பிறந்த மூன்று மாதங்கள் வரை குழந்தைக்கான தாயின் கவனிப்பு மிக முக்கியமானது.
குழந்தை பிறந்தவுடன் தாயானவளுக்கு குழந்தையை எப்படி பாதுகாத்து வளர்க்கப் போகிறோம் என்ற பயம் தாய்க்கு தொற்றி விடுகிறது.
சிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. சிறிது அமிலத்தன்மை உள்ள சோப் குழந்தைகளுக்கு நல்லது. அதிகமாக நுரை இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
நிறம் மற்றும் வாசனைக்காக அதிக வேதிப்பொருட்கள் சேர்த்து இருக்கக் கூடாது. பாசிப்பயிறு, மாவு கடலை மாவு போன்றவை உபயோகித்தால் தோல் கடினத் தன்மையை அடைகிறது. அதிக மஞ்சள் பூசினாலும் தோல் உலர்ந்து கெட்டிப்படுகிறது. சீயக்காய் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.