Home குழந்தை நலம் குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!

குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!

22

கணவன் மனைவி இருவர் மட்டுமே நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்புறீங்களா? குழந்தைகளை கூட்டிச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை மட்டும் வீட்டில் தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது என்னமாதிரியான சங்கடங்கள், சிக்கல்கள் ஏற்படும் என்பதை யாராலும் உணரமுடியாது. எனவே குழந்தைகளை தனியாக விட்டுச்செல்லும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

அவசரகால தொலைபேசி எண்கள்

தீ போன்ற ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர எண்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஒருவேளை உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது நியமித்திருந்தால் அவர்களின் மொபைல் போன்களிலும் அவசரகால எண்களை மெமரியில் சேகரித்த வையுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் அவசரகால எண்களை தெரிவிப்பது அவசியம்,

வீட்டிற்குள் வைத்து பூட்டவேண்டாம்

குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. திடீர் நிலநடுக்கமோ, தீ விபத்தோ ஏற்படும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. அது போன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லலாம்

பயிற்சி அளியுங்கள்

தனியாக இருக்க நேரும்போது தாங்களாகவே கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது குறித்தும். சங்கடங்கள் ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

சமையலறை கதவை பூட்டுங்கள்

வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றாலே குழந்தைகள் சென்று விளையாடும் இடம் சமையலறைதான். எனவே முதலில் சமையலறை கதவை பூட்டுங்கள். குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளை ஹாட் பாக்ஸ்சில் போட்டு டேபிள் மேல் வைக்கவும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவைகளை தனியாக எடுத்து வைக்கவும். இதனால் குழந்தைகள் சமையலறைக்கு போக வாய்ப்புகள் எழாது.

தொலைக்காட்சி ரிமோட் கவனம்

தனியாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியோ, கணினியோதான் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு. பெரியவர்கள் இல்லை என்றால் அவர்கள் இஷ்டம்தான். எனவே கண்டதையும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் ப்ளாக் செய்து விடுங்கள். அது குழந்தைகளின் நலனுக்கு பாதுகாப்பானது.