Home குழந்தை நலம் குழந்தைகள் நகம் பராமரிப்பு முறைகள்:

குழந்தைகள் நகம் பராமரிப்பு முறைகள்:

24

Newborn_fingernails_BRAND-P_TA1. குழந்தைகளின் நகத்தை அடிக்கடி வெட்டி விட வேண்டும். ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், சாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும். குழந்தைகளுகென்றே சிறிய வகை நகவெட்டிகள் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள்.

2. சில குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும், அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்த அளவு நகத்தை கடிக்க வேண்டுமென தெரியாமல் நகத்தை அதிகமாக கடித்துவிடுவார்கள் இதனால் நாகத்தொடு ஒட்டியிருக்கும் சதை பகுதி காயமடையிந்து ரத்தம் வரும். இவ்வாறு குழந்தைகள் நகம் கடிக்காமல் இருக்கவேண்டுமானால் அவர்களுக்கு வளரும் நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும்.

3. சிறு குழந்தைகளின் நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள். உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்றும் உங்களுக்கு தெரியாது.

4. குழந்தைகள் குளித்து முடித்ததும் அவர்களின் விரல் நகங்கள் ஈரத்தில் ஊறி மிருதுவாக இருக்கும் அந்த நேரத்தில் நகம் வெட்டினால் மிகவும் சுலபமாக இருக்கும்.