Home குழந்தை நலம் குழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்

குழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்

16

1..வயிற்றுபோக்கு : குழந்தைகள் வயிற்றுபோக்கினால் பாதிக்கப்படுவது எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது உணவு ஒவ்வாமையினால் ஏற்படக்கூடியது. சில உணவுகள் அஜீரணம் ஆகாமை, நோய்தொற்று, ஒவ்வாமை உணவு, போன்ற காரணங்களால் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் சில
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு நீரேற்றத்தை தக்க வைத்துகொள்ளும் உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை ஒரு மருந்தளவு கொடுப்பதால் குழந்தைகளின் உடலுக்கு வலு சேர்க்கிறது.. இதற்கு பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் மருத்துவரை அனுகுவது அவசியம்.

2..காய்ச்சல்: பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் வர குழந்தைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன அதாவது ஜலதோஷம், இருமல், நோய்தொற்று, உடலின் வளர்ச்சி மாற்றங்கள் என பல காரணங்களால் ஏற்படுகிறது. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சலை நோய்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் என நினைத்து வீட் மருத்துவத்தை பயன்படுத்துகின்றனர். குழந்தைக்கு 100 டிகிரி அதனைவிட அதிக டிகிரியில் காய்ச்சல் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

3..இருமல்: குழந்தைக்கு இருமல் இருப்பின் அதை சரிசெய்ய பல வீட்டு மருத்துவமே உள்ளது அதை நீங்கள் பயன்படுத்தி குழந்தையின் இருமலை சரிசெய்யலாம். இது குழந்தைகளை அடிக்கடி தாக்கும் ஒரு நோய். இது காய்ச்சல் வரும் நேரங்களில் மூக்கில் நோய்தொற்று ஏற்படுத்துகிறது. கடுமையான காய்ச்சலுடன் இருமலும் சேர்ந்து குழந்தையின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் நிமோனியா அல்லது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கும்..இது உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்..இது தொற்று நோய் பட்டியலில் வரக்கூடியது. இது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

4..வயிறு பிரச்சினைகள்: வயிறு வலி, மலச்சிக்கள்,அமிலத்தன்மை,அஜீரணம் போன்ற காரணத்தால் வயிற்றில் விலி, வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. கிருமிகள் உள்ள உணவை சாப்பிடுவதால் வறிற்றில் வலி ஏற்படுகிறது. லேசான காய்ச்சலுடன் வயிறு வலி இருந்தால் உடனே மருத்துவரை பரிசோதிக்க வேண்டும்.

5..அரிப்பு மற்றும் தடிப்பு: குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாப்பர் அரிப்பு, தோல் அழற்சி, அதிக நேரம் உபயோகிப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இதை உபயோகபடுத்துவதில் கவனம் தேவை…