Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு எப்பொழுது கழிப்பறை பயிற்சி தருவது?

குழந்தைகளுக்கு எப்பொழுது கழிப்பறை பயிற்சி தருவது?

25

குழந்தைகளுக்கு எப்பொழுது கழிப்பறை பயிற்சி தருவது?
பொதுவாக குழந்தைகளுக்கு, கழிப்பறை பயிற்சியை இரண்டு வயது ஆன பின்பு ஆரம்பித்தால் போதுமானது. இரண்டு முதல் மூன்று வயதிற்குள் இந்த பழக்கத்தை நிலை நாட்டி விடலாம்.

குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆனவுடன், டைபர் உபயோகிப்பதை நிறுத்திவிடவும். கழிப்பறைக்கு சென்றுதான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும் என வற்புறுத்திப் பழக்க வேண்டும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்களை அடித்து துன்புறுத்திப் பணிய வைக்க முயற்சிக்க கூடாது.

ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தைக்கு கழிப்பறை உபயோகிக்கும் முறை பற்றி சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களை நன்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அதிகமாக கண்டித்தால் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.