Home சமையல் குறிப்புகள் காலிஃபிளவர் – கேரட் சப்பாத்தி

காலிஃபிளவர் – கேரட் சப்பாத்தி

13

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
காலிஃபிளவர்- 1 கப்
கேரட் – 2
கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

• காலிஃபிளவரை உப்பிட்ட சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அழிந்து விடும்.

• பிறகு நல்ல தண்ணீரில் அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும். கேரட்டையும் துருவிக் கொள்ளவும்.

• கேரட்-காலிஃபிளவருடன் உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

• கோதுமை மாவுடன் சிறிது உப்பு கலந்து இந்தக் கலவையையும் ஒன்றாகக் கலந்து மாவு பிசையவும்.

• அரை மணி நேரம் ஊறிய பிறகு மாவை சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் கல்லில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி இறக்கவும்.

• சுவையாக காலிஃபிளவர் – கேரட் சப்பாத்தி ரெடி.