Home சமையல் குறிப்புகள் காய்ந்த மிளகாய் சிக்கன்

காய்ந்த மிளகாய் சிக்கன்

22

0c47dd53-6598-443b-acfc-4393e45fe49a_S_secvpf-300x225தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்பு இல்லாமல் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
வெங்காயம்
எண்ணெய்
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது
காய்ந்த மிளகாய் – 10
உப்பு
செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து காய்ந்த மிளகாயின் விதைகளை எடுத்து விட்டு தோலை மட்டும் சேர்க்கவும்.

* பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து தனியா தூள் சேர்த்து சிக்கன் வேக சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

* சிறிது கொத்தமல்லி சேர்க்கவும்.

* சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும்.

* சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.