Home அந்தரங்கம் காமம் என்பது உண்மையில் என்ன? மனிதன் மற்ற மிருகங்கள் போலில்லை!

காமம் என்பது உண்மையில் என்ன? மனிதன் மற்ற மிருகங்கள் போலில்லை!

123

காமம் என்பது உண்மையில் என்ன? கண்டிப்பாக அது ஆர்கஸம் மட்டுமில்லை! அதற்கு மட்டுமென்றால் இன்னொரு உயிர் தேவையே இல்லை! உடல் உணர்வை மட்டுமல்லாது, நமக்கான இன்னொரு உயிர், நம்மை விரும்பும் உயிர், நம் நெருக்கத்தை சிலாகிக்கும் ஒரு உயிர் உடன் இருக்கும் ஒரு புளங்காகித உணர்வையும் பகிரும் ஒரு அழகான, ஆழமான தருணத்தை நமக்களிக்கும் ஒரு சந்தர்ப்பம்.

தொடு உணர்வு என்பதே, நம் வார்த்தைகள், செயல்களை மீறி, நம் தொடு உணர்வே இயற்கையில் நம் அன்பை மற்றவர்க்கு உணர்த்தும் சக்தியை பெற்றது. ஏனெனில் அதனால் பொய் சொல்ல, நடிக்க தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட பகிர்தல் என்பது இன்று எல்லோருக்கும் கிடைக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுந்தால், கிடைக்கிறது என சொல்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவே கருதப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். மனிதன் மற்ற மிருகங்கள் போலில்லை என்பதை உணர்த்த, உணர நாம் இயற்கைக்கு புறம்பாக பல இலக்கணங்களை வகுத்திருக்கிறோம். அவையே இன்று அன்புடன் கலந்த காமத்திற்கு வறட்சியை ஏற்படுத்திவிட்டது.

அன்பும் காமமும் கலக்காத வரை, ஆணும் பெண்ணும் சகஜமாக பழக கற்றுக்கொள்ளாத வரை, பெண்ணிற்கு தேவை அன்பு மட்டுமே, ஆணிற்கு தேவை காமம் மட்டுமே என்ற நமக்கு நாமே செய்து கொண்டுள்ள மூளைச் சலவைகளை களையாத வரை, அன்பின் வறட்சியில் சிலர் காமத்திற்கு பலியாவதும், காமத்தின் வறட்சியை அன்பெனும் போர்வை கொண்டு மறைப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.