Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடுப்பான கவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி

எடுப்பான கவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி

70

download (1)உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்,

இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

• குந்து பயிற்சி (Squats) : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

• ஸ்டேப்-அப்ஸ் (Step Ups) : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

• லாஞ்சஸ் (Lunges) : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.

• குவியல் குந்து பயிற்சி (Plie Squats) : உங்கள் கால்களை கொஞ்சம் அகலமாக அகட்டி, உங்கள் இரண்டு தொடைகளும் நேர் கோடாக வரும் அளவு அமர்ந்து எழுந்திரிக்கும் பயற்சி தான் குவியல் குந்து பயிற்சி (Plie Squats). இந்த பயிற்சியின் மூலம் உங்கள் இடை, தொடை மற்றும் பின்பாகம் பகுதிகள் வலுவாகும் மற்றும் கவர்ச்சியான தோற்றம் பெறும்.

• கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.