Home சமையல் குறிப்புகள் கம்பு தயிர் சாதம்

கம்பு தயிர் சாதம்

22

தேவையான பொருட்கள்:

கம்பு – 1/2 கப்
தண்ணீர் – 4 கப்
புளிக்காத தயிர் – 1 கப்
கேரட் -1
மாங்காய் – சிறிய துண்டு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1/4 இன்ச்

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை, மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• இஞ்சிசை துருவிக் கொள்ளவும்.

• கம்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

• தண்ணீர் அதிகம் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

• பின்பு அத்துடன் தயிர், பின் கேரட், கொத்தமல்லி, மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்து, கம்புடன் சேர்த்து கிளறவும்.

• சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!!!