Home இரகசியகேள்வி-பதில் ஓரல் செக்ஸ் ஆர்வலரா? வாய் புற்றுநோய் வருமாம்!

ஓரல் செக்ஸ் ஆர்வலரா? வாய் புற்றுநோய் வருமாம்!

56

வாய்வழி செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு வாய், தொண்டையில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் வைரஸ்களில் எளிதில் வாய் மற்றும் தொண்டையில் பரவுவதே காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளினாலும், புகையிலைப் பொருட்களினாலும் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என்று தெரியவந்தது.

மேலும் வாய்ப்புற்றுநோய்க்கு papilloma virus தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது ஓரல் செக்ஸ் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ள நிபுணர்கள் வந்தபின் தவிப்பதை விட வருமுன் தவிர்ப்பதே நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.