Home இரகசியகேள்வி-பதில் எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது

எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது

69

47266767என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?
உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும். பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது. இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம் எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல் இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன் பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.

பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி அடைந்து விடுகிறது. என்ன காரணம்?
இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும் யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல், உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால் உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.

கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும் பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்கிறார்களே, உண்மையா? ஆம் எனில் எதனால்?
இந்த கருத்து உண்மையல்ல. ஒரு பெண்ணின் உடம்பில் முடிஅதிகமாக இருக்ககாரணம் அந்த பெண்ணின் உடம்பு அமைப்பும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டினாலும் அதிகமாக முடியிருக்கலாம். இது முடி அளவுக்கும் காமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என் மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி திருப்திபடுத்தலாம்?
திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது. ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்திப்படுத்த வேண்டும்.

பாலியல் – கேள்விப் பதில்களில் இந்த முறை சுய இன்பம் தொடர்பிலான கேள்வி பதில்களை பார்ப்போம்…. ஏனெனில் பெரும்பாலான வாசகர்கள் சுய இன்பம் தொடர்பில் தான் கேள்விகளை கேட்டு இருந்தார்கள்.

கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
மருத்துவரின் பதில்: பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன். ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது.
1.சுயஇன்பம்,
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில