Home சூடான செய்திகள் எனக்கு இன்னும் அதெல்லாம் அலுக்கவே இல்லை:நடிகை திரிஷா!

எனக்கு இன்னும் அதெல்லாம் அலுக்கவே இல்லை:நடிகை திரிஷா!

25

மெகா சீரியல் போல முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது திரிஷாவின் திருமணப் பேச்சும். காலையில் திருமணம் என்று ஒரு செய்தி வரும். ஆனால் மாலையில் அப்படியே உல்டாவாக புதிய படத்தில் நடிக்கிறார் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று இன்னொரு செய்தி வரும். இப்படி மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.

ஒரு வேளை சினிமாவில் சான்ஸ் பிடிப்பதற்காகத்தான் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகிறார் போல் இருக்கிறது.

இந்நிலையில் தமிழிலும் தெலுங்கிலும் இன்னமும் பிஸியாகவெ இருக்கிறார் திரிஷா. இப்போது விஷாலுடன் நடிக்கும் சமர் படத்தை விடவும் இரண்டு தமிழ் படங்களும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைவிட தெலுங்கில் ரவிதேஜாவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் இப்போது.

இப்போது இருக்கும் நிலவரப்படி கோடிகளில் சம்பளம் வேறு வாங்குறாராம்.கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் படு பிஸியாகவே இருக்கிறார்.

இதைப்பற்றி அவரே கூறியதாவது:

“சினிமாவில் வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நல்ல வாய்ப்பையும் மறுப்பதில்லை. காரணம் எனக்கும் நடிப்பு இன்னும் அலுக்கவே இல்லை. எனவே கல்யாணத்துக்கு இது சரியான நேரமாக எனக்குத் தெரியவில்லை.

எனக்காகப் பிறந்தவர் நிச்சயம் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்,” என்கிறார்.