Home சூடான செய்திகள் உறவினில், ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டிய ஏழு விஷயங்கள்!!!

உறவினில், ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டிய ஏழு விஷயங்கள்!!!

36

4-320x240அனைத்து விஷயங்களிலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை நாம் திருத்திக் கொள்கிறோமா? இல்லையா? என்பதில் தான் நமது நிலையின் தரம் சார்ந்திருக்கிறது. நண்பர்கள் மத்தியிலோ, நமது வீட்டினர் மத்தியிலோ நமது நிறை, குறைகள் பற்றி நாம் பெரிதாய் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டோம்.

ஆனால், புதிதான ஓர் உறவு, அதில் இனி நமக்கென வாழப்போகும் ஒருத்தி வரவிருக்கிறாள் எனும் போது, கட்டாயம் நாம் நமது நிறை, குறைகளை சரி செய்துக் கொள்ள வேண்டும். அதில், இல்லற வாழ்வில் “கட்டாயம்” எனும் வார்த்தை வரும் போது, ஏழு விஷயங்களில் ஆண்கள் குறையின்றி இருக்க வேண்டும் என பெண்களால் எதிர்பார்க்கப்படுகிறது…

அதிகாலை கொஞ்சுதல்
காலை எழுந்ததும், ஹஸ்கி குரலில் ஆண்கள் கொஞ்சுவது அவசியம். இது, கணவன் மனைவி உறவை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அன்றைய நாளை மகிழ்வாக நகர்த்தி செல்லவும் உதவுமாம்.

கட்டிப்பிடிப்பது
நாலு ஊருக்கு கேட்கும் படி பேசும் ஆண்களில் பெரும்பாலானோர், செயல்முறை என்று வந்துவிட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள். அப்படி அல்லாமல், கட்டிப்பிடிப்பதில் வல்லவர்களாக இருக்க வேண்டும் (வலுவாக அல்ல, வல்லவர்களாக)

மகிழ்வாக வைத்துக்கொள்ளுதல்
தான் மட்டுமின்றி தன்னையும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்ளும் தன்மை உடையவராக ஆண்கள் இருக்க வேண்டியது அவசியம். முகத்தை “உர்ர்ர்” என்று வைத்துக் கொண்டே இருந்தால், மனைவி கூட அருகே வர பயப்படுவாள்.

தவறு செய்தால் ஒப்புக்கொள்ளும் குணம்
இது மனித இனத்திற்கு அப்பாற்பட்ட குணாதிசயம். ஆனால், இதற்கு நேரெதிராக பலர் தங்களது தவறுகளை ஒப்புக்கொள்பவர்களும் இருக்கின்றனர். அப்படி, தாங்கள் செய்த தவறுகளை ஆண்கள் ஒப்புக்கொண்டால், இல்வாழ்க்கை, நல்வாழ்க்கையாக அமையும்.

நன்றாக சாப்பிடுதல்
ஆண்மகனின் இலட்சினையே வீரமும், தைரியமும் தான். அதற்கு உடலில் முதலில் வலு வேண்டும். அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எனவே, ஆண்கள் திருமணத்திற்கு பிறகாவது நன்கு சாப்பிட வேண்டும். (பொண்டாட்டி கிட்ட அடிவாங்கவாவது வலு வேணுமா.. இல்லையா..)

தீர்வுக் காணுதல்
எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும், அதை கண்டு பயந்து ஓடாமல், எதிர்த்து நின்று தீர்வுக் காணும் குணம் மிகவும் அவசியம்.