Home இரகசியகேள்வி-பதில் உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் . . .

உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் . . .

36

நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்ப ப்படியும், என் பிடிவாத குணத்தா லும் அவருடைய அக்கா பெண் ணான என்னை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கல்யாணத்திற்குமுன் என்னிடம், தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினார். ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கை யில் நான் அதை மறுத்து, “உங்களைத் தான் திருமணம் செய்து கொள் வேன்’ என்று சொல்லிவிட்டேன். என் கணவர், வெளியூரில் கல்லூரி யில் வேலை பார்ப்பவர்; அவரிடம் படிக்கும் மாணவிதான் அந்தப் பெண்.
திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. என்னை அவர் வேலைபார்க்கும் இடத்திற்கு, கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் பெற்றோர் வெளியூரில் இருக்கின்றனர். அவர்களிடமும் என்னை கூப்பிட்டு போக மாட்டார், பேச மாட்டார், சிரிக்க மாட்டார்.
படுக்கையறையில் மட்டும் அவரின் சந்தோஷத்திற்காகவோ இல் லை என்னுடைய சந்தோஷத்திற்காகவோ தெரியவில்லை… சில நாட்கள் மட்டும் சேர்ந்திருப்போம். நானும், அவர் இன்று மாறி விடு வார், நாளை… மறுநாள் என்று எண்ணி புது மணப்பெண்ணின் ஆசைகளோடு இருந்து ஏமாந்து விட்டேன். குழந்தை இல்லை.
நான் செய்த தவறு, அவர் என்னிடம் அந்தப் பெண்ணை விரும்புவ தாக கூறியும், பிடிவாதமாக என்னை கல்யாணம் செய்யச் சொன்ன துதான். அது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய, மன்னிக்க முடியாத தவறு. என் அத்தை, அவரிடம் விசாரித்ததில் அவர் கூறியது … “இவள் என்னை விரும்பி கல்யாணம் செய்து கொண்டாள். அந்தப் பெண்ணை நான் விரும்புகிறேன். அந்தப் பெண்ணிற்கு நான் துரோ கம் செய்ய நினைக்கவில்லை. ஆகையால், அந்தப் பெண்ணையும் எனக்கு திருமணம் செய்து வையுங்கள்; இருவரையும் நான் நன்றாக வைத்துக் கொள்கிறேன். இதுதான் என் முடிவு…’ என்று கூறி விட் டார்.
மேலும், அந்தப் பெண் வெளியூரில் மேற்படிப்பு படித்துக் கொண்டிரு க்கிறாள். அதை முடித்தால் என் கணவருக்கு சமமாக (படிப்பில்) ஆகிவிடும். என்னிடம், “நீ, உன் மாமாவிற்காக அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் தா’ என்று கூறினார். அவர் மேல் வைத்த அளவு கடந்த அன்பினாலும், தூய்மையான காதலினாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கும் வகை யில் கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.
அன்றிலிருந்து சுத்தமாக நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், லெட்டர் கொடுத்த பிறகு என்னிடம் மிகவும் பிரியமுள்ளவராக மாறி விட்டார். ஆனால், என்னால்தான் அவரிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. “உனக்கும் சரி, அந்தப் பெண்ணிற்கும் சரி துரோகம் செய்ய மாட்டேன்…’ என்று கூறுகிறார்.
என் வீட்டில் உள்ளவர்களும் அவருடைய சந்தோஷத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். நான், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் விலாசம் என்னிடம் உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணிடம் பேசக் கூடாது என்று சொல்லி விட் டார்.
என் வாழ்க்கையில் இன்னொருத்திக்கு பங்கு கொடுக்க முடியாமல், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் உங்களின் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்கள்.
— பெயர் வெளியிட விரும்பாத உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. செய்வதை எல்லாம் செய்து விட்டு, யோச னை கேட்டால் எப்படி?
உன்னைப் பிடிக்காத, வேறொருத்தியை விரும்புகிற மனிதரை, பிடி வாதமாய் மணந்து கொண்டது படு முட்டாள்தனம் என்று நீயே எழுதி யிருக்கிறாய். அதனால், அதைக் கூறி, நானும் உன்னைக் காயப் படுத்துவதில் எந்தவித பயனும்இல்லை.
இரண்டாவதாக இப்போது நீ செய்திருக்கிறாயே… அதுதான் படுமோ சமான முட்டாள்தனம்
மனமொப்பாமல் வாழ்க்கை நடத்த உன் கணவருக்கு பிடிக்கவில் லை என்றால் – நீ செய்த தவறுக்கு ஒரு பிராயசித்தம் செய்ய விரும் பினால் – விவாகரத்து பெற்று, உன் பிறந்த வீட்டோடு போயிருக்கலா மே நீ!
எதற்காக, நீயும் இருந்து, இன்னொருத்தியும் உன் கணவருடன் சேர் ந்து வாழ கடிதம் மூலம் அனுமதி கொடுத்தாய்? இது என்ன சினிமா வா? சினிமாவில் பார்க்கத்தான் இதெல்லாம் உருக்கமாக, சோகத் தைப் பிழிந்து தருவதாக இருக்கும்; ஒரிஜினல் வாழ்க்கைக்கு இதெ ல்லாம் ஒத்து வராது.
நாளைக்கு அவளும் நீயும் ஒரே வீட்டில் வாழ்வீர்களா? உனக்கு குழ ந்தைகள் இல்லை என்கிறாய். நாளைக்கு அவளுக்குப் பிறந்தால், நீ மனமொப்பித் தாலாட்டு பாடுவாயா அல்லது உன் கணவரும், அவ ளும் ஒரு படுக்கையறையில் கதவைத் தாழிட்டு படுக்க – நீ தனியே படுத்து, “கடவுள் தந்த இரு மலர்கள்…’ என்று சோக கீதம் பாடுவாயா? எதற்கு இந்த விஷப்பரிட்சை?
சொந்த அக்காள், மகளை மணந்த உன் மாமா, தன் அக்காள் குடும் பத்துக்குத் துரோகம் செய்யாமல், அதே நேரம் தன் மனசுக்குப் பிடித்த வளையும் கைவிடாமல் வாழ இப்படியொரு திட்டத்தை வகுத்திருக் கலாம். உனக்கும், தற்போதைக்கு மாமாவை மனங்குளிரச் செய்து விட்டோம் என்கிற எண்ணம் இருக்கலாம்.
ஆனால், புதுசாய் வரப் போகிறவள், இதையெல்லாம் ஒத்துக் கொள் ள வேண்டும் என்று என்ன தலையெழுத்து? அவள் யோசிக்காமலா இருப்பாள்? என்னதான் காதலராக இருந்தாலும், வேறு ஒருத்தியை மணந்து இரண்டு வருடம் வாழ்ந்தவரை, அந்த முதல் மனைவியை யும் வைத்துக் கொண்டு, உன்னையும் வைத்து காப்பாற்றுகிறேன் என்கிறவரை மணக்க – அந்தப் பெண் யோசிக்க மாட்டாளா?
அவளிடம் உன் கணவர் என்ன சொல்லியிருக்கிறாரோ!
“கொஞ்ச நாள் பல்லைக் கடித்துக் கொண்டு இரு… அப்புறம் அவளை பிறந்த வீட்டுக்கே அனுப்பி விடுகிறேன். பார், அவளிடமிருந்து மறு மணத்துக்கு கடிதம் கூட வாங்கி விட்டேன்…’
-இப்படிச்சொல்லியிருக்கலாம் அல்லது அப்பெண்ணே, மணமாகி வந்த பிறகு, உன்னை விரட்டி விடலாம் என தீர்மானித்திருக்க லாம்.
அந்தப் பெண்ணை மணக்க, நீ சம்மதம் அளித்ததனாலேயே உன் கணவர் உன்னுடன் பிரியமாகப் பேசுகிறார் என்றால் அந்த பிரியம் வேண்டாமே! ஒன்றைக் கொடுத்துத்தான் அன்பைப் பெற முடியும் என்றால் அது வியாபாரம் கண்ணம்மா.
மனைவியாக வந்தவளை ஏமாற்றாமல் ஏற்றுக் கொள்வோம். அவ ளுடன் நல்லபடியாக வாழ்வோம் என்றில்லாமல், பழைய காதலி யையே நினைத்துக் கொண்டிருப்பது உன் கணவர் செய்யும் தவறு. எப்போது காதலன் ஒருத்திக்குச் சொந்தமாகி விட்டானோ – அந்தக் கணமே அவனை மறக்க வேண்டியது நல்ல பெண்ணுக்கு அடையா ளம். அதைவிட்டு, இரண்டாம் தாரமாய்வர அவள் சம்மதிப்பது பெரிய தவறு.
ஆதலால், இந்த வாரமலர் இதழை எடுத்துக் கொண்டு, உன் கண வரின் காதலியைப் பார். நான் கூறியவைகளைப் படித்த பின்பும், “இல்லை, என்னால் அவரை மறந்து இருக்க முடியாது’ என்று அவள் அழுது ஆகாத்தியம் செய்தால், “அப்படியானால் நீயே அவரது மனை வியாக இரு; நான் விலகிக்கொள்கிறேன்…’ என்று கூறி விலகிவிடு.
இதற்காக அழாதே. உனக்குச் சொந்தமில்லாத எதுவும் உனக்கு வேண்டாம். அடுத்த வீட்டிலிருந்து ஒரு கரண்டி காபிப் பொடி இரவல் வாங்குகிறாய். திருப்பிக் கொடுக்கும்போது அழுவாயா என்ன? வாங் கின பொருளைத் திருப்பித் தர வேண்டியதுதானே முறை. ஆதலால், உன் கணவரிடம் கூறி, விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு விலகப்பார். அவரே, தன் மனதை மாற்றிக் கொண்டு, “நீ போ தும்’ என்றால், அவருடன் வாழ்க்கையைத் தொடரு. ஒரு உறையில் இர ண்டு கத்திகள்… ஒரு மனிதனுக்கு இரு மனைவிகள்… எப்போதும் பிரச்னை தான்!