Home சூடான செய்திகள் உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்

உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்

17

images (1)பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்ததுதான் அதற்குக் காரணம்.

சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா?

நாம் சந்திக்கும்… உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் இப்படி உணர்ச்சிகளின் பட்டியலுக்கு எல்லையே இல்லை.

இவை எல்லாமே இருந்தால் தான் முழு மனிதன். எந்த நேரத்தில் இந்த குணங்களை வெளிப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல்தான் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள்.

காம உணர்வுகளை அடக்கலாமா?

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.

செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.

காம உணர்ச்சிகளை அடக்குவதால் என்ன நடக்கும்?

காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய் வரும். தலைவலி வரும், திடீர் ஜூரம், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல்பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி, இறுதியில் இதயநோய் வந்தாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சிகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

உணவும் காமமும்!

முருங்கைக்கீரை, முருங்கைகாய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் அதை நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்கு செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக சொல்கிறார்கள்.

நம் நாட்டில் துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் உப்பு, காரம் இல்லாத உணவுகளை உண்பது காம உணர்வை அடக்கத்தான் என்கிறார்கள். ஆனாலும் அவர்கள் காம வயப்படாமலா இருக்கிறார்கள்?
எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.

உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்:

பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையை கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.

உடற்பயிற்சி:
காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும்.
வீட்டுத் தோட்டம் அமையுங்கள்: நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இசை:
இசையைக் கேப்டதை விட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் காமத்திற்கா பெரும் வடிகாலாக அது அமையும்.
புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.
நண்பர்களிடம் பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு இதில்தான் கிடைக்கும்.

மதுவுக்கு அடிமையாகாதீர்கள்: மது மயக்கம் காம உணர்வாக இருந்தாலும் சரி, எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்தும். அவர்கள் மதுவை அறவே நீக்குவதுதான் இதிலிருந்து விடுபட ஒரே வழி