Home அந்தரங்கம் உடல் உ றவிற்கு பிறகு வலது பக்கமாக படுத்து உறங்கினால் ஆண் குழந்தை பிறக்குமா? பாட்டி...

உடல் உ றவிற்கு பிறகு வலது பக்கமாக படுத்து உறங்கினால் ஆண் குழந்தை பிறக்குமா? பாட்டி சொன்னதும், டாக்டர் சொல்வதும்!

316

எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும், குழந்தை பிறப்பு குறித்த சில மூடநம்பிக்கைகள் இன்னும் குறைந்தபாடில்லை. என்னுடைய நண்பனின் மனைவிக்கு பிரசவம் ஆவதற்கு முன்னால், ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்று கேட்டே ஒரு வழியாக்கிவிட்டார்கள் உறவினர்கள். அதான் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என பார்த்து சொல்லக்கூடாதென அரசு சொல்லுதே, அப்படி இருந்தும் ஏன் இந்த கேள்வி கேட்கறீங்க என்று நண்பன் கோபம் வந்து, சொந்த பந்தத்தை ஒரு வாங்கு வாங்கிவிட்டான்.

அவங்களும் அது தெரிந்து கொண்டே தான் கேட்டு இருக்காங்க. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது வேற விதத்தில். அதாவது கர்ப்பமாக இருக்கும் போது வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை பிறக்குமாம். வயிறு சின்னதா இருந்தா ஆண் குழந்தை பிறக்குமாம். அதான் நானும் கேட்டேன். அப்போ வயிறு ரொம்ப பெரிதாக இருந்தால், இரட்டைக்குழந்தை பிறக்குமான்னு? ஒருத்தரும் வாய் திறக்கல. பிறப்பது எந்த குழந்தையா இருந்தா என்ன? குழந்தை பாக்கியம் ஒரு வரம். எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பம் தரித்த பின்னர் இப்படி கேள்வி வருகிறது என்றால், திருமணத்திற்கு பிறகான தாம்பத்திய உறவை வைத்து, இன்னும் ஒரு மூடநம்பிக்கை சுத்திக்கிட்டு இருக்கு. உடல் உ றவிற்கு பிறகு வலது பக்கமாக படுத்து உறங்கினால், ஆண் குழந்தை பிறக்கும், இடது பக்கம் படுத்து உறங்கினால் பெண் குழந்தை பிறக்கும்னு எங்கையோ படிச்ச மாதிரி ஒரு நியாபகம். எனக்கு முன்னோர்களின் நம்பிக்கையில் நிறைய மரியாதை இருக்கு, ஆனால் இடையில் யாரோ பரப்பிவிட்ட இது போன்ற மூடநம்பிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தூங்கும் முறை தீர்மானிக்காது, ஆணின் விந்தணுவில் உள்ள குரோமோசோம்களே தீர்மானிக்கின்றன. பெண்ணின் கரு முட்டை x வகையாகும். அதனுடன் ஆணின் y குரோமோசோம் இணைந்தால், xy என்று மாறி ஆண் குழந்தை பிறக்கும். ஆணின் x குரோமோசோம், பெண்ணின் கருவுடன் இணைந்தால், பெண் குழந்தை பிறக்கும். ஆண் குழந்தை பெண் குழந்தையை தீர்மானிப்பது ஆண்களின் வி !ந்துதான். அம்மாவின் எந்த ஒரு அசைவோ அதை தீர்மானிப்பதில்லை. பாலினத்தை தீர்மானிப்பது ஆண்களே! இப்பவாவது புரிஞ்சிக்கோங்க!