Home அந்தரங்கம் எதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர்! மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது ஏன்?...

எதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர்! மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது ஏன்? ஆரம்பத்திலேயே கிள்ளி எறி தாயி!

87

“மென் வில் பீ மென்” அதாவது ஆண்கள் எப்போதும் ஆண்களாகவே இருப்பார்கள் என்ற சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. என்ன தான் தங்கம் தங்கமாக பேசினாலும், உள்ளுக்குள் ஆண் என்ற உணர்வு இருந்து கொண்டே தான் இருக்குமாம். இந்த கான்செப்டை வைத்து, நிறைய ட்ரோல் வீடியோக்கள் கூட, சோஷியல் மீடியாவில் பகிரப்படுவதை அடிக்கடி பார்க்கலாம். அந்த வகையில், இதனோடு தொடர்புடைய, நிஜ வாழ்க்கை சம்பவத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு, சமீபத்தில் கிடைத்தது.

எனக்கு நன்கு அறிமுகமான தோழியின் கணவர், இன்னொரு பெண்ணுடன் உ றவு முறையில் இருக்கிறாராம். அவள் ஒரு நாள் வெளிப்படையாகவே கேட்டபோது, அக்கா முறையில் பழகுவதாக கூறி மழுப்பியுள்ளார். அக்கா, தம்பி உறவு தாய்க்கு நிகராக மதிக்கப்படுவதை தெரிந்து கொண்டே, ஏதோ சாக்குப்போக்கு சொல்லி தோழியின் கணவர் நழுவ பார்த்தாலும், அவளுக்கு கணவனின் பதிலில் துளியளவும் நம்பிக்கை இல்லை. ஒரு நாள் அவர் குளிக்க போன சமயத்தில், மொபைல் போனை எடுத்து பார்த்திருக்கிறாள். வாட்ஸ்ஆப் செயலிக்கு மட்டும் பாஸ்வோர்ட் லாக் இருந்துள்ளது.

தோழிக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை, அவர் அசந்து இருந்த நேரம் பார்த்து, பாஸ்வோர்ட் என்ன என்பதை அறிந்துகொண்டாள். பிறகென்ன? இப்போ கணவனின் மொத்த ஜாதகமும் தோழி கையில் இருக்கு. இரவில் நைட் டியூட்டி என்று சொல்லிவிட்டு செல்லும் நாட்களில், வேறு எங்கோ அறை எடுத்து தங்கி, எதிர் வீட்டு பெண்ணுடன் தவறான முறையில் வீடியோ அனுப்பி பேசியிருக்கிறார். சில வீடியோ கால் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

எதிர்வீட்டு பெண்ணை திருத்த முடியாது. ஏற்கனவே பல ஊர்களில் இது போல பிரச்சனை செய்து, இப்போ எங்க ஊருக்கு குடி மாறி வந்திருக்காங்க. அடித்து வளர்க்காத பிள்ளையும் பாழ், முறித்து வளர்க்காத முறுங்கையும் பாழ், கண்டித்து வைக்காத கணவனும் பாழ் என்கிற பழமொழி மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போக, இப்போ ஆபீசில் நைட் டியூட்டி என்றால், அதற்கான ஆதாரத்தை கேட்க ஆரம்பித்துவிட்டாள் தோழி. ஒரு ஆண் தவறு செய்கிறான் என்பதற்காக அவனைவிட்டு விலகுவது தோழியின் நோக்கம் அல்ல. சல்லாபத்தால் கணவன் தவறான வழிக்கு சென்றிருந்தாலும், மீண்டும் தன் வழிக்கு கொண்டு வர துணிந்து களமிறங்கிவிட்டாள். கணவன் போகிறான் என்பதற்காக, தானும் போக வேண்டும் என்ற ஈகோ சிலரிடத்தில் வருவதால் தான் குடும்பம் சிதைகிறது. இந்த விஷயத்தில் என் தோழி கெட்டிக்காரி.