Home பெண்கள் பெண்குறி உங்க மனைவியின் அந்தரங்க பகுதியில் இது இருந்தால் நீங்கள் சற்று விலகி இருக்கலமே!

உங்க மனைவியின் அந்தரங்க பகுதியில் இது இருந்தால் நீங்கள் சற்று விலகி இருக்கலமே!

91

பெண் உறுப்பில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை தான். ஆனால் இதன் அறிகுறிகள் பெண்களுக்கு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும். பெண்ணுறுப்பில் பி.எச் அளவை நிலையாக பராமரிக்க வேண்டியது அவசியம். இல்ல என்றால், அது வலி, அரிப்பு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். பெண்ணுறுப்பில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பூஞ்சை பாதிப்பை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. சுகாதார பழக்கம் பெண்கள் தினமும் சுத்தமான, ஊட்டச்சத்து உணவை சாப்பிட வேண்டியது அவசியம். இதனால் பெண்ணுறுப்பு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வாசனை மிகுந்த சோப்புகளை பெண்ணுறுப்புக்கு பயன்படுத்த வேண்டாம்.

2. கழிப்பறை சுத்தம் : உங்களது உள்ளாடைகள் சுத்தமாகவும், ஈரமற்றதாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பூஞ்சை பாதிப்பு இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடையை மாற்ற வேண்டியது அவசியம். கழிப்பறைக்கு செல்லும் போது எல்லாம், முன்பகுதியில் இருந்து பின்னோக்கி பெண்ணுறுப்பை துடைக்க வேண்டியது அவசியம். இதனால் பாக்டீரியா வேறுபகுதிக்கு பரவாது.

3. ஈரமாக இருக்க கூடாது பெண்களே உங்களது அந்தரங்கப் பகுதியை குளித்த பிறகும், கழிப்பறைக்கு சென்ற பிறகும் நன்றாக துடைத்து, காய்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். கண்டிப்பாக ஈரமான உள்ளாடையை போட கூடாது.

4. உடலுறவு பூஞ்சை பாதிப்பு இருக்கும் நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது இருவருக்கும் நல்லது இல்லை. அதுமட்டுமின்றி, உடலுறவு வைத்துக்கொள்வது, சிகிச்சை எடுத்து வரும் காலத்தில் வைத்துக்கொள்வது நிலையை மோசமாக்க கூடும். உடலுறவு வைத்துக்கொண்டால், தொற்று அதிகரிக்கவும், வலி, அசௌகரியத்தை உணரவும் வாய்ப்புள்ளது.

5. வினிகர் குளியல் இயற்கை பொருளான இந்த ஆப்பிள் சிடர் வினிகரானது அந்தரங்கப்பகுதியில் பி.எச் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. அரை கப் ஆப்பிள் சீடர் வினிகரை அறையின் வெப்பநிலையில் உள்ள நீரில் கலந்து, 15 அல்லது 20 நிமிடங்கள் குளிக்க வேண்டும்.

6. சரியான உள்ளாடை உள்ளாடையால் தான் அதிகமாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் கண்டிப்பாக காட்டன் உள்ளாடைகளை சௌகரியமான அளவில் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அதிக நேரம் ஈரமான உள்ளாடைகளை அணிவதை முற்றிலும் தடுக்க வேண்டியது அவசியம்.

7. பௌடர் போட கூடாது உங்களது அந்தரங்கப்பகுதிக்கு கண்டிப்பாக டால்கம் பௌடர், வாசனை நிறைந்த பௌடர்களை போடக்கூடாது. இது அந்தரங்கப்பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடும்.