Home குழந்தை நலம் உங்க குழந்தை உடம்பு தேறவே மாட்டேங்குதா?… இத கொஞ்சம் செஞ்சு கொடுங்க…

உங்க குழந்தை உடம்பு தேறவே மாட்டேங்குதா?… இத கொஞ்சம் செஞ்சு கொடுங்க…

23

குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருப்பது, என்ன வாங்கிக் கொடுத்தாலும் உடம்பு தேறவே மாட்டேங்குது என்பது பெரும்பாலான பெற்றோர்களின் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது.

குழந்தைகள் பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை விரும்பி உண்ணும் அளவுக்கு ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்பிச் சாப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு குழந்தைகள் மீதும் வைக்கப்படுகிறது.

சில குழந்தைகள் உயரமாக வளர வளர உடல் எடை குறையவும் ஆரம்பிக்கும். அதனாலேயே உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர்.

அதுபோன்ற உடல் எடை தேறாமல் எலும்பும் தோலுமாக இருக்கிற குழந்தைகளுககு சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே ஹெல்த் மிக்ஸ் செய்து கொடுங்கள். உங்கள் குழந்தையின் உடல் எடையில் நல்ல மாற்றம் உண்டாகியிருப்பதை உங்களால் உணர முடியும்.

தேவையான பொருட்கள்

பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
வால்நட்ஸ் – 100 கிராம்
பிஸ்தா – 100 கிராம
ஏலக்காய் – 10
உளுந்து – 200 கிராம்
பாசிப்பயறு – 150 கிராம்
ஓட்ஸ் – 150 கிராம்
பார்லி – 150 கிராம்
எள் – 150 கிராம்
கேழ்வரகு மாவு – 500 கிராம்)
சோயா மாவு – 200 கிராம்

செய்முறை

வாணலியில் பாசிப்பயறு, உளுந்து, ஓட்ஸ் மற்றும் பார்லியை நல்ல மணம்வீசும் வரை தனித்தனியாக வறுக்கவும். மாவுகளை தவிர மற்ற பொருள்களையும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு சிறிதுநேரம் ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸில் நன்கு அரைக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த மாவினை அப்படியே எடுத்து வைக்காமல் சிறிதுநேரம் ஆறவைத்து டப்பாவில் அடைத்து பத்திரப்படுத்துங்கள்.

இந்த பொடியை சூடான பாலில் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இந்த வாசனை மிகுந்த ஹெல்த் மிக்ஸை உங்கள் குழந்தைகளும் விரும்பிக் குடிப்பார்கள். இவை உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ண கூடியதாகவும், எளிதில் செரிமானமாக கூடியதாகவும் இருக்கும். இதில் நீங்கள் விரும்பினால் சுவைக்கேற்ப சாக்லேட் சேர்த்து கொள்ளலாம். இது கட்டாயம் உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும்.