Home குழந்தை நலம் உங்கள் குழந்தை ஜெயிக்கணும்னா இந்த மந்திரங்களை மட்டும் கற்றுக்கொடுங்கள்.

உங்கள் குழந்தை ஜெயிக்கணும்னா இந்த மந்திரங்களை மட்டும் கற்றுக்கொடுங்கள்.

15

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல் மாடல் பெற்றோர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து தான் முதலில் நல்லது எது? கெட்டது எது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

தனக்கு நன்கு விவரம் தெரிந்த பிறகு தான் தான் வளர்ந்து என்னவாக மாற வேண்டும்? யாரைப் போல் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை மிகச்சிறந்த லட்சியமுடைய சமூகப் பொறுப்புடைய குழந்தையாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு பெற்றோருடைய கடமையும் ஆகும்.

குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமை. அதை விட்டுவிட்டு எங்கேயும் போகாதே… எதுவும் செய்யாதே… புதிதாக எதையாவது முயற்சித்து சொதப்பி விடாதே என்று அவர்களுடைய நம்பிக்கையை இழக்கும் எந்த வார்த்தையையும் குழந்தைகளிடம் சொல்லக்கூடாது.

எந்த குழந்தையாலும் 24 மணி நேரமும் படிப்பிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க முடியாது. அதனால் எப்போதும் படி படி என தொந்தரவு செய்யாமல் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த அனுமதியுங்கள்.

அவர்களுக்கப் பிடித்த விஷயங்களின் மீது கவனம் செலுத்தினால், குறிப்பிட்ட ஏதேனும் ஒரு துறையில் தனித்துவம் பெற முடியும்.

குழந்தை சிறியதாக ஏதாவது பரிசு பெற்று வந்தால் கூட உன்னை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று புகழுங்கள். அவர்களின் செயல்களை ஊக்கப்படுத்துங்கள்…

அடுத்த குழந்தைகளோடு ஒருபோதும் உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள்.

உன்னால் வெற்றி பெற முடியும், முடிந்தவரை முயற்சி செய் என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை அவ்வப்போது விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்கும்படி எதையாவது பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

சமூக மதிப்புகள் என்று சொல்லப்படும் சோசியல் வேல்யூஸை குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி, பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் முன் பெற்றோர்கள் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.