Home சூடான செய்திகள் உங்களுக்கு முத்த வைத்தியம்

உங்களுக்கு முத்த வைத்தியம்

27

1012953_1593597317536241_2953330671849982050_nஅன்பும், காதலும் அளவுக்கு அதிகமாகும் போது, அனைவரிடம் இருந்தும் அது வெளிப்படும் அளவீடு முத்தமாகத்தான் இருக்கும். காதலர்களுக்கும், கணவன்– மனைவிக்குள் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம், ரீங்கார சத்தமாகவே ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவரது முதல் முத்தம் மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, தர்மசங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி.. அது தம்பதிகளின் மனதிலும், காதலர்களின் வாழ்க்கையிலும் அழுத்தமாகவே பதிந்திருக்கும்.
அப்படி முதன் முதலாக கிடைத்த இதழ் ரேகைகளின் தடத்தை, எளிதில் மறந்துவிட முடியாது. முத்தங்களால் இணைந்த காதல் கதைகள் ஏராளம்.
கணவன்–மனைவி சண்டையில் விழுந்த பல சிக்கலான முடிச்சுகளை, முத்தங்கள் அவிழ்த்த கதைகள் பல உண்டு. இதழ் முத்தம், இருமனங்களுக்குள்ளும் அன்பு மற்றும் பிணைப்பை அதிகப்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
அன்பின் வெளிப்பாடாக இருக்கும் முத்தம், ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக மனைவியின் ஆசை முத்தம் கணவரின் மன அழுத்தம், தொப்பை, சோர்வு போன்றவற்றை வெகுவாக குறைத்துவிடும் என்பது சிலரது கருத்து. ஆரம்ப காலத்தில் இருந்தே ஆய்வில் இருந்த முத்த வைத்தியத்தை, உண்மை என்று அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. அது பற்றிய சிறு அலசல்…
முத்தங்களை இடமாற்றி கொள்வதால் என்ன பயன் என்று சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதில், இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கும் தம்பதியர் உடலில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதை கண்டுபிடித்தார்கள்.
அதாவது, இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பவர்கள் டென்ஷன் ஆக மாட்டார்கள் என்பதே இவர்களது ஆராய்ச்சியின் முடிவு. இதற்கு முன்னரும் பல ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆராய்ந்துள்ளனர். இருப்பினும் சுவிஸ் ஆராய்ச்சி யாளர்களின் முடிவுகளையே உலக அறிவியலாளர்கள் அதிகமாக ஏற்றுள்ளனர்.
மேலும், இவர்கள் திருமணம் முடிந்தவர்களுக்கும், திருமணம் ஆகாதவர் களுக்கும் இடையே மன அழுத்தம் எந்த அளவில் இருக்கிறது என்ற கோணத்திலும் ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள். அப்போது, புதிதாக திருமணம் ஆனவர்கள் மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரியவந்தது.
இதற்கான காரணம் முத்தம் என்பதே அந்த ஆய்வின் முடிவு. திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்த பிறகு, பெரும்பாலான கணவர்கள், மனைவியருக்கு முத்தங்களை பரிமாறி கொள்வதில்லையாம். அதனால் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் முத்தத்தையே காரணமாக்கி உள்ளனர்.
முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஆண்கள் கொடுப்பது கிடையாது என்றும், சில கணவன்மார்கள் மனைவிக்கு முத்தமே கொடுப்பதில்லை என்றும் ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 66 சதவீதம் பேர் முத்தமிடும் போது கண்களை மூடிக்கொண்டும், மீதமுள்ளவர்கள்தான் திறந்தபடியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியும் முத்தமிடுகிறார்களாம்.
‘கூச்சத்தை தூண்டும் அளவிற்கு, இத்தகைய சதவிகித அளவுகள் தேவையா?’ என்று கேட்டவர்களுக்கு இதற்கான விடையை விளக்கி உள்ளனர். மனைவியை பார்த்தப்படி முத்தமிடுவதால் மனதில் காதல், அன்பை தவிர வேற எந்த எண்ணங்களும் தோன்றாதாம். இல்லையேல் முத்த சமயத்திலும் அலுவலக பணிகள் எண்ணத்தில் சிறகடிக்கும் என்பது இவர்களது ஆய்வின் முடிவாக உள்ளது.
இதுதவிர முத்தத்தால் ஏற்படும் சில நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.
* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகின்றன. இது முகப்பொலிவை தக்கவைத்து கொள்ள உதவும். 40 வயதிற்கு மேல் முகப்பொலிவுடன் இருக்க வாழ்க்கை துணையை முத்தமிட்டு தான் பாருங்களேன்.
* எந்த அளவுக்கு அதிகமாக முத்தம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு முதுமையில் முகத்தில் சுருக்கம் வரும் நாட்கள் வெகுதூரத்திற்கு செல்கின்றன.
* ஒரு முறை முத்தமிடுவதால் 23 கலோரி சக்தி, நம் உடலில் எரிக்கப்படுகிறது. மேலும் பிரெஞ்சு முத்தமாக இருந்தால், 5 கலோரி வரை கூடுதலாக எரிக்கப்படுகிறதாம். குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிட்டால், உடலின் 36 கலோரி சக்தியை குறைக்க முடியுமாம். இதன்மூலம் அவர்களது அதிகப்படியான தொப்பையும் குறைய வாய்ப்பிருக்கிறதாம். வழக்கமான உடற்பயிற்சிகளுடன் முடிந்தவரை இதையும் தான் முயற்சித்து பாருங்களேன்.
* ஆர்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் எக்ஸிமோக்கள், தங்களது மூக்கால் முத்தமிட்டுக் கொள்கிறார்களாம். இதழ் முத்தங்களுடன், மூக்கு முத்தங்களும் உலக வழக்கில் வந்துவிட்டது.
* வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டு செல்லும் கணவன்மார்கள், அவ்வாறு முத்தமிடாதவர்களைக் காட்டிலும் 5 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம். இதற்கும் மன அழுத்தம், உடல் எடையை தான் காரணமாக அடுக்கியுள்ளனர்.
‘முத்தம் கொடுங்கள்’
முத்தம் என்றதுமே வாழ்க்கை துணை, காதலி இவர்களை தவிர்த்து நடிகர்–நடிகைகளும் நினைவுக்கு வந்துவிடுவார்கள். ஏனெனில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்களில் முத்த காட்சிகள் இடம்பெற தவறுவதில்லை. இதனால் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சத்தமாக கேட்ட முத்த கருத்துகளை அலசி ஆராய்ந்திருக்கிறோம்… இதையும் பாருங்களேன்….!
ஏஞ்சலீனா ஜோலி– பிராட் பிட்
“முத்தம் கொடுப்பதன் மூலம் வெளிவரும் எண்டோர்பின் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். ஆகவே நீங்கள் அதிக மன கவலையாகவோ அல்லது மன கஷ்டமாகவோ இருக்கும் போது, மருத்துவரை அணுகாமல், உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள். இதனால் மன கஷ்டம் நீங்கி, மனம் சந்தோஷமாக இருக்கும்”– ஏஞ்சலீனா ஜோலி
“அனல் பறக்க முத்தம் கொடுக்கும் போது, உடலில் இருந்து அட்ரினலின் என்னும் வலியைக் குறைக்கும் ஹார்மோன் வெளியேற்றப்படும். ஆகவே தலைவலி, உடல் வலியின் போது, உங்கள் துணையை இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். மற்ற மருந்துகளை விட, இது உடனடி நிவாரணத்தை வழங்கும்”– பிராட் பிட்
வித்யா பாலன்
“அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், வீட்டிற்கு வந்ததும், உங்கள் துணையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். அவர்களின் பாசமிக்க முத்தம், மன அழுத்தத்தை குறைத்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரிலாக்ஸ் அடையச் செய்யும்”.
சான்ட்ரா புல்லக்
“முத்தம் கொடுப்பதன் மூலம் நிறைய கலோரிகள் எரிக்கப்படாவிட்டாலும், இது உடலில் மெட்ட பாலிசத்தை இருமடங்கு அதிகரிக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், உங்கள் துணையுடன் முத்தம் மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் முத்தம் தசைகளை இறுக்கமடையச் செய்து, முகம் மற்றும் உங்கள் இளமைத் தன்மையை அதிகரித்து வெளிக்காட்டும்”.
சான்ட்ரா புல்லக், ஹாலிவுட்டில் 45 வயதை தாண்டியும் அட்டகாசமான உடற்கட்டுடன் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.