Home சூடான செய்திகள் இளைய தலைமுறையினரிடம் குறையும் செக்ஸ் ஆர்வம்

இளைய தலைமுறையினரிடம் குறையும் செக்ஸ் ஆர்வம்

20

images
அமெரிக்காவில் இளைய தலைமுறையினரிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆர்வம், கடந்த 25 ஆண்டுகளில் குறைந்து வருவது ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.

2011-2013 இடையே, 15-19 வயது பிரிவினரில் 44 சதவீதம் பெண்கள், 47 சதவீதம் ஆண்கள் செக்ஸ் உறவு கொண்டுள்ளதாக கூறி உள்ளனர்.

1988-ம் ஆண்டு, இதே வயது பிரிவில் 51 சதவீத பெண்கள், 60 சதவீத ஆண்கள் செக்ஸ் உறவு வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் பாதுகாப்பான செக்ஸ் உறவு கொள்கிறவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளதும் இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

2002-ம் ஆண்டு, 94 சதவீத இளம்பெண்கள் ஒரு முறையாவது கருத்தடை சாதனம் பயன்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறி உள்ளனர்.

2011-13 ஆண்டுகளில் 97 சதவீத இளம்பெண்கள், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இளம் வயதில் முதல் முறையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிற இளைய தலைமுறையினர் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தி பாதுகாப்பாக இருந்து கொள்ளவே விரும்புகின்றனர்.