Home சூடான செய்திகள் ஆன்லைனில் தனது மகளிடம் நிர்வாணப்புகைப்படங்களை கேட்ட தகப்பன்

ஆன்லைனில் தனது மகளிடம் நிர்வாணப்புகைப்படங்களை கேட்ட தகப்பன்

13

father-get-nude-pictures-from-dhagter-300x161தனது மகளின் காதலன் போன்று நடித்து தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு, மகளின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களைப் பெற்­றுக்­கொண்­ட­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதி­மன்றில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.
நியூயோர்க் மாநி­லத்தைச் சேர்ந்த 41 வய­தான இந்­ நபர் 14 வய­தான தனது மகளின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களைப் பெற்றுக்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இவர் 16 வய­தான இளை­ஞ­னாக தன்னைக் காட்­டிக்­கொண்டு சமூக வலைத்­த­ளங்­களில் போலி பெயரில் கணக்­கு­களை ஆரம்­பித்து தனது மக­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­தினார்.
பின்னர் அச்­ சி­று­மியை காத­லிப்­ப­தா­கவும் கூறிக்­கொண்டார். சமூக வலைத்­த­ளத்தில் தன்­னுடன் தொடர்பில் இருப்­பவர் தன்னை உண்­மை­யாக காத­லிக்கும் இளைஞன் என அச்­ சிறுமி கரு­தி­னாராம். பின்னர் அச்­ சி­று­மியின் நிர்­வா­ணப்­ப­ப­டங்­களை தனக்கு அனுப்­பு­மாறு மேற்­படி நபர் நிர்ப்பந்­தித்தார் என அதி­கா­ரிகள் தெரிவித்­தனர். சிறார்கள் தொடர்­பான ஆபா­சப்­ப­டங்­களை வைத்­தி­ருந்­தமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் இந்­ நபர் மீது சுமத்தப்பட்டன.
இது தொடர்­பாக நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது தான் குற்­ற­வாளி என கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­படி நபர் ஒப்­பு­க்கொண்­டுள்ளார். மேற்­படி சிறுமி இனங்­கா­ணப்­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக இந்­ ந­பரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அவர் சுமார் 250 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளது.
இத் தண்டனை விபரம் இவ் வருட இறுதியில் அறிவிக்கப்படும்.