Home ஆண்கள் ஆண்மைக்கு அழகு எது என்றால் அனுதினமும் உடலுறவுகொள்வது தானாம்!

ஆண்மைக்கு அழகு எது என்றால் அனுதினமும் உடலுறவுகொள்வது தானாம்!

35

images (9)தலைப்பைப் பார்த்து ஏதோ கில்மா சங்கதி என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி நாள்தோறும் உடலுறவு கொள்ளும் ஆண்க ள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளா த ஆண்களை விட கருத்தரிப்புத் தங்கும் திற ன் உள்ள விந்தணுக் களை உற்பத்தி செய்ய வல்லவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தியவர்கள் அனைவரும் ஓரிரு முறையாவது கருத்தரி ப்பில் பிரச்னை உள்ளவர்கள் என்பதால் இது ஓரளவுக்கு நம்பகமான முடிவாகக் கருதலா ம் என இந்த ஆய்வை மேற்கொண்ட சிட்னி யைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் கிரீனிங் தெரிவித்துள்ளார்
கருத்தரிப்பில் சிக்கல் உள்ள தம்பதியர் தமக்குள் அதிகபட்சமாக இர ண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டு வர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள் ளார். கருத்தரிப்புத் தங்காமல் இருப்பதற்குப் பொதுவாகப் பெண்களை மட்டும் குறைசொல்வது பொ துவாக உள்ளது. ஆனால், ஆண்களின் பங்கும் இதில் பெருமளவு உள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
நீண்ட நாட்கள் வெளியேறாமல் விரைகளிலே யே தங்கி இருக்கும் விந்தணுக்களின் மரபணுக் கள் அவை இருக்கும் சூழலில் 7 நாட்களுக்கு மேல் இருந்தால் அவற்றின் மரபணுக்கள் (DNA) சேதமடைந்துவிடும் என்றும், இது கருவின் நிலைத் தன்மையைப் பெருமளவு பாதிக்கும் என்றும், ஒருவேளை கரு நிலை கொண்டாலு ம் அதன் வளர்ச்சி சவா லாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களின் சினைமுட்டைகள் உருவாகும் காலத்தில் ஒரு நாளிலேயே பலமுறை உட லுறவு கொள்வதும் கரு நிலைப்புத் தன்மை யை உறு தி செய்யும் என்று அவர் கூறினார். “ஆறு என்பது ஓடிக்கொண்டே இரு க்க வேண் டும்; நிற்கக் கூடாது” என்று சிலேடையாகக் கூறினார்.
டாக்டர் கிரீனின் இந்த ஆய்வு சுவாரசியமாக இருந்தாலும், இக்குறை பொதுவாக இல்லாத ஆண்களுக்கு இந்த உபா யம் பயனளிக்குமா என இத்துறை வல்லுனரான இன்னொரு மருத்துவர் ஆலன் பேஸி ஐயம் எழுப்பினார். ஆனாலும் கருத்தரிப்பைக் குறிக்கோளாகக் கொண்ட தம்ப தியர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது உடலு றவு கொள்ள வேண்டும் என்ற டாக்டர் கிரீனின் அறிவுரை உண்மை யின் பயனுடையது என்று அவர் தெரிவித்தார்.