Home இரகசியகேள்வி-பதில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு-கேள்வி-பதில்

அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு-கேள்வி-பதில்

69

(2) 1tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kamaதிருமண மான மூன்றாம் ஆண்டில், விவாகரத்து ஆகி, நான்கு வருடங்கள் சென்று விட்டன. ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். என் சுபாவமே, என் கணவருக்கு சந்தேகமாகி, அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, விவாகரத்தாகி விட்டது. தற்போது பிறந்த வீட்டிலிருக்கும் நான், வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்யுமிடத்தில் ஒருவருடன் பழகியதில், மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. ஆனால், அவர் என் சஞ்சலத்தை புரிந்தும், புரியாதவர் போல விலகி விலகி சென்றார்; திருமணம் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்ததால். அவருக்கு, என்னை விட பத்து வயது அதிகம். அமைதியானவர். பின், என் எண்ணத்தை அறிந்து, என் மேல் இரக்கப்பட்டு, “திருமணம் செய்து கொள்கிறேன்; உன் எண்ணம் எனக்கு புரியும். ஆனால், முறை தவறி நடக்கலாகாது…’ என்று கூறி, என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளார். இது, எனக்கு, சற்று தாமதமாகத்தான் தெரிய வந்தது. அவருடன் பேசுவதை நிறுத்தினேன். இதற்கிடையில், வேலைக்கு வந்து செல்லும்போது, நண்பராக பழகிய ஒருவர் மேல் விருப்பப்பட்டேன். ஆனால், அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனினும், அவர் என்னையும் திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். முதலில் நான் விரும்பிய நபர், ரிசர்வ்ட் டைப். என் ஜாலி டைப்பிற்கு, ஒத்து வராது என்று நினைத்து, திருமணத்திற்கு மறுக்கிறேன். அவரோ, “இப்படிப்பட்ட இரண்டு கேரக்டர்கள் தான் நன்றாக இருக்க முடியும்…’ என்று கூறுகிறார். இரண்டாமவர், நல்ல ஜாலி டைப்; என் வயதை ஒத்தவர். அது தான் சரியாக வருமென்று நான் நினைக்கிறேன். இது, அவரது முதல் மனைவிக்கு துரோகம் செய்வது ஆகுமா? நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா? மீண்டும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய, நீங்கள் ஆலோசனை கூறவேண்டும்.
உண்மையுள்ள மகள்.

அன்பு மகளுக்கு— உன் கடிதம் படித்தேன்..

. தான் செய்வது தவறு என்பது கூடத் தெரியாமல், ஒரு பெண் இருப்பாளா என்ற, வருத்தம் தான் ஏற்பட்டது. தெரியாமலா பெரியவர்கள், “இதயம் ஒரு கோவில்’ என்று கூறினர். அந்தக் கோவிலில் மூல விக்கிரகமாக, யாராவது ஒருவர் தான் இருக்க வேண்டும். கண்ட வர் வந்து உட்கார்ந்தால், மூன்றாந்தர லாட்ஜுக்கு சமமாகி விடாதா? ஏற்கனவே, கணவரை விவாகரத்து செய்த நீ, “நான் ஜாலியான, யதார்த்தமான, ஆண்களுடன் சகஜமாகப் பேசுபவள்; ஆனால், என் சுபாவமே என் கணவருக்கு சந்தேகமாகி, விவாகரத்தாகி விட்டது…’ என்று எழுதியிருக்கிறாய். ஜாலி என்றும், யதார்த்தம் என்றும் எதை நினைக்கிறாய் நீ? கண்ட ஆண்களுடன் அரட்டையடித்து, இரட்டை அர்த்த ஜோக்குகளைப் பரிமாறிக் கொள்வதையா அல்லது ஸ்கூட்டரில் ஊர் சுற்றி, அவரது மனதில் ஆசை நெருப்பைத் தூவி, பிறகு, “ஐயோ, நான் யதார்த்தமாகத்தான் பழகினேன்…’ என் பதையா? எப்போதும் புன்னகை தவழ, எந்த வேலையையும் சிரித்தபடி செய்து, ஆண்களிடம் ஓரளவு இடைவெளி விட்டுப் பழகி, நல்ல சிநேகிதிகளுடன் வம்பில்லாது, கலகலவெனப் பேசுவது தான் நிஜமான ஜாலி. வாழ்க்கையில் மேலே உயரும் போது, எத்தனையோ சறுக் கல்கள் வரும். அவைகளைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் யதார்த்தம். சரி… உன் விஷயத்துக்கு வருகிறேன்… முதல் கணவனையே, நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்புறம் ஆபீசில், நீ பார்த்து காதல் வயப்பட்ட, அமைதியான, உன்னை விடவும் பத்து வயது மூத்தவர்… இவரிடமும் உனக்கு காதல் இல்லை. ஏதோ, அப்போதைய, தற்காலிகமாய் காதல் என்று ஒன்றை, உனக்கு நீயே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறாய். உண்மையான காதல் என்றால், இப்படிப்பட்ட இவரை விட்டு, இன்னொருவரைத் தேடிப் போயிருக்க மாட்டாய். அந்த இரண் டாவது ஆள், மன்மதனாக, ஜாலி ஆசாமியாக, பெரும் செல்வந்தராக கூட இருக்கட்டுமே… உன் மனம் இதில் சலனப்படக் கூடாது. அடுத்து, நீ செய்யப்போவது மகா பாவமான காரியம். ஏற்கனவே திருமணமாகி, இரண்டு மாதங்களாக மனைவியுடன் சேர்ந்திருக்கிற ஒரு மனிதரை, எப்படி நீ தேர்ந்தெடுத்தாய்? இந்த லட்சணத்தில், “இது முதல் மனைவிக்கு துரோகமாகுமா, நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா…’ என்றெல்லாம் கேள்வி கேட்டிருக் கிறாய். என்னைப் பொறுத்த வரையில், நீ, இப்போதைக்கு, யாரையும் மனசாலும் நினைக்காமல், உன் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையானப் பாது காப்புக்கு, நல்ல வேலையில் இருப்பதும், உன் ஐந்து வயது மகனுக்கு, நல்ல தாயாக இருப்பதும்தான் நல்லதெனத் தோன்று கிறது. இந்த இருவரில் யாரை மணந் தாலும், மறுபடியும் நீ கஷ்டப்படுவாய்; அவர்களையும் அவஸ்தைக்குள்ளாக்கு வாய். முதலில், உன்னை நீ உணர்ந்து கொள். இப்போதைக்கு, உன்னை விட பத்து வயசு பெரிய முதல் மனிதரிடம், கொஞ்ச நாள் அவகாசம் கேள்! இரண்டாவது ஆசாமியிடம், “சாரி… எனக்கு இதில் இஷ்ட மில்லை…’ என்று சொல்லி விடு. அப்புறம் பார்… உன்னை அறியாமலேயே, பெருமைக்குரிய பெண்மணியாகப் பேசப்படுவாய். எது நல்லது, எது கெட்டது என்பது கூடப் புரியாமல், வெறும் உடற்பசிக்காக, சேற்றில் காலை வைக்காதே. வாழ்த்துகள். இப்படிக்கு அன்புடன், மணிமாலா