Home சூடான செய்திகள் அலுத்துப் போன செக்ஸ் புத்துணர்ச்சி அடைய

அலுத்துப் போன செக்ஸ் புத்துணர்ச்சி அடைய

26

download (4)நமது அப்பா அம்மா தினம், தினம் சண்டையிட்டுக் கொண்டாலும் கூட அவர்களிடம் இல்லறத்தில் அலுப்பு ஏற்பட்டதே கிடையாது. ஆனால், இந்த தலைமுறையினர் திருமணமான ஓரிரு வருடங்களிலேயே அலுப்பு தட்டிவிட்டது என்று நண்பர்களிடம் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதற்க யாரோ ஒருவர் காரணம் இல்லை. இல்லறத்தில் அலுப்பு ஏற்படுகிறது எனில், கணவன், மனைவி இருவருக்குள் தான் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். திருமணமான புதிதில் நீங்கள் செய்துக் கொண்டிருந்த சிலவற்றில் எதையோ நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
எதை மறந்தீர்கள், எப்போதிருந்து மறந்தீர்கள் என்று நீங்கள் அறிந்து, அதை மீண்டும் செய்யத் தொடங்கினாலே போதும். இல்லறத்தில் நீங்கள் உணரும் அலுப்பு நீங்கிவிடும்….
தீண்டுதல்
உடலுறவின் போது மட்டுமின்றி, உங்கள் இருவருக்குள் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என எது நேரும் போதும் நீங்கள் தீண்டுதல்களால் அவரை அரவணைக்க வேண்டும். உங்களுக்கு என்ன தான் கவலை இருந்தாலும், இரு கைகளில் முகத்தை உங்கள் துணை தூக்கிப் பிடித்து “என்னடா ஆச்சு..” என்று கேட்கும் போது மொத்தமும் கரைந்துவிடும். இந்த தீண்டுதல் தான் தேவை.

அகம் மகிழ நன்றி
சிறு சிறு விஷயமாக இருந்தாலும் கூட அதற்கு நன்றி கூறுதல் அவசியம். “நமக்குள்ள என்ன இதெல்லாம்..” என்று சிலர் கூறலாம். ஆனால், நன்றி கூறுதல் மனதளவில், அது எந்த உறவாக இருந்தால் பிணைப்பை அதிகரிக்கும். எனவே, காலையில் காபிக் கொடுக்கும் போது கூட புன்னகையுடன் ஒரு நன்றி கூறி ஆரம்பியுங்கள்.
பயணங்கள்
பயணங்கள் என்பதுடன் இருவரும் ஒன்றாக வெளியில் சென்று வருதல் என்று கூறலாம். அது கோவிலாகவோ, கடைத் தெருவாகோ கூட இருக்கலாம். நீங்கள் இருவரும் ஒன்றாக சென்று வரும் போது மனம் இலகுவாகும். வீட்டில் அமர்ந்து பேசுவதைவிட, வெளியிடங்களுக்கு சென்று நடந்துக் கொண்டே பேசும் போது மனது ரிலாக்ஸ் ஆகிறது.
அறிவித்தல்
நீங்கள் அலுவலகம் சென்றடைந்த பின்னர், உணவு சாப்பிட்ட பிறகு, வீட்டில் இருக்கும் பெண்கள் எங்காவது வெளியில் சென்று வரும்போது அல்லது வெளியூர் பிராயணம் செய்திருந்தால் நீங்கள் இன்று எங்கெல்லாம் செல்ல போகிறேர்கள் என நீங்கள் இருவரும் செய்த, செய்யப் போகும் வேலைகளை ஒருவரிடம் மற்றொருவர் அறிவித்தல் பிணைப்பை அதிகரிக்க உதவும்.

நாட்கள் செல்ல செல்ல
திருமணமான புதிதில் அனைவரும் இவற்றை எல்லாம் சரியாக தான் செய்கிறார்கள். ஆனால், போக, போக தான் ஒவ்வொன்றாக மறந்துவிட்டு இல்லறம் அலுத்துப்போய்விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
பக்கங்களை புரட்டிப் பாருங்கள்
நீங்கள் திருமணமான ஆரம்ப நாட்களில் என்னெவெல்லாம் செய்தீர்கள், அவற்றில் இப்போது எதெல்லாம் செய்வதில்லை என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை சரி செய்துக் கொண்டாலே இல்லறத்தில் அலுப்பு நீங்கிவிடும்.