Home சமையல் குறிப்புகள் அட்டகாசமான மணமும், சுவையும் கொண்ட ஆட்டு ஈரல் கூட்டு!

அட்டகாசமான மணமும், சுவையும் கொண்ட ஆட்டு ஈரல் கூட்டு!

26

ருசியான குழந்தைகளுக்கு பிடித்தமான ஆட்டு ஈரல் கூட்டு எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையானவை

ஈரல் – 1/4 கிலோ
எண்ணெய் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்துமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

ஈரலை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள்தூள் போட்டு கழுவி வைக்கவும்.

தக்களியை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய வைத்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து கிளறி 2 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு ஈரலை சேர்த்து பிரட்டி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரட்ம மசாலா தூள், அரைத்த தக்காளி, பச்சை மிளகாய் சோத்து கிளறி விடவும்.

மசாலாதூள் ஈரலில் நன்கு கலந்தவுடன் ஈரல் வெந்ததும் கொத்தமல்லி தழையைத்தூவி விட்டு பரிமாறலாம்.