Home குழந்தை நலம் அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுப்பது எப்படி

அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுப்பது எப்படி

25

குழந்தையானது, தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவாகிய நாளிலிருந்தே, தாயாளவள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் சில காரணங்களால் நோய் வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் வைத்தியரை அணுகும்போது தன் குறைகளை சொல்வதோடு மட்டுமல்லாமல் தான் கருவுற்று இருப்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இதனால், பின் விளைவோ பக்க விளைவோ ஏற்படுத்தாத மருந்துகளைக் கொடுக்க வைத்தியர்கள் முன்வருவார்கள்.

இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் அங்கக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.

கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கடினமான வேலைகளைத் தவிர்த்து, சுலபமான வேலைகளைச் செய்ய வேண்டும். குறைவான நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகை போன்ற குறைகள் உள்ள பெண்கள் கவனமாக வைத்தியம் தேடி நோய் எதிர்ப்பு சக்தியையும், நல்ல இரத்த விருத்தியையும் பெறவேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. மேலும் ஆண், பெண் இருபாலருக்கும் அனுதினமும் வேப்பிலை இரண்டினையும் வில்வ இலை இரண்டினையும் மென்று, தின்று விழுங்க வேண்டும்.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நல்ல பசி எடுக்கும். அங்கக் குறையுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்க முடியும்.

மேலும், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தல்கூடாது. அதாவது, இரத்த சம்பந்த உறவுகளில் திருமணம் செய்தல் கூடாது.