Home சூடான செய்திகள் விலை போகும் ஆண்-பெண்

விலை போகும் ஆண்-பெண்

23

sona_4மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வாழ்ந்த விலைமாது சீமா. தன் தொழிலையும், அதைத் தாண்டி காதலில் விழுந்த கதையினையும் மனம் திறந்து பேசுகிறாள் இங்கே…
“என்னை போன்ற விலைமாதுக்கள் திருமண வாழ்க்கையை கனவில் மட்டுந்தான் நினைத்து பார்க்க முடிம். நான் பல ஆண்களால் பயன்படுத்தபட்டிருக்கிறேன். அதில் சிலர் என்னிடம் காதல் வசப்பட்டதாகக் கூறியிருக்கின்றனர். பிரபலமான பிசினஸ் மேக்னட் முதல் விமானம் ஓட்டும் பைலட்கள் வரை என்னுடன் படுக்கையறையில் இருக்கும்போது என்மீது காதல் கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள நாட்களை அவர்களுடன் உல்லாசமாக நேர்மையாக கழிக்கலாம் என்றும் உருகியிருக்கிறார்கள். எப்போதும் என்னுள் ஓங்கியிருக்கும் பாதுகாப்புணர்வினால் யாருடைய காதலிலும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். ஆனால், காலம் செய்த மாயம். நானும் காதலில் விழுந்தேன்!”
எப்படி?
“பாந்த்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு என் வாடிக்கையாளருடன் சென்று கொண்டிருந்தபோது, அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சிரஜ் என் கவனத்தைக் கவர முயன்றான். ஆனால், முதல் பார்வையில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆதலால் நான் அவனை கண்டுகொள்ளவே இல்லை!
ஆனால் விதி யாரை விட்டது? நான் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு மூன்று மாதங்களாக வாடிக்கையாளர்களுடன் சென்றபோதெல்லாம் சிராஜே காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அதனால் நானும், அவனும் நண்பர்களானோம்! மாலைவேளைகளில் நான் ஓய்வில் இருக்கும்போது சிரஜ் தானாகவே வலிய வந்து என்னை அவனது காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது அழைத்துச் செல்வான். காலபோக்கில் அவன் என்னிடம் விபசாரத் தொழிலை அறவே விட்டுவிட்டு தன்னை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தினான்.
ஆனால் நான் என்னை அவனுடன் இணைத்துக்கொள்வதற்கு பயந்தேன். ஏன்என்றால் நான் முதலில் மும்பைக்கு வந்தபோது இது போல் சொன்ன ஒருவனது காதலில் வீழ்ந்தேன். அவனோடு வாழ்ந்தேன். சில மாதங்களில் அவனோ என்னை மற்ற ஆண்களுக்கு விலைபேசி அனுப்பும் புரோக்கர் ஆகிவிட்டான். அவனுக்கு நான் மாதம் 30 ஆயிரம் ரூபாய்வரை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பதிலுக்கு அவனுக்கு கிடைக்கும் கமிஷன் பணத்தில் ஒரு பகுதியை எனக்குத் தந்து என்னை மகிழச் செய்துகொண்டிருந்தான். இருந்தாலும் அந்த வாழ்க்கை கசந்துவிட்டது. அதனால் நான் அவனிடமிருந்து பிரிந்துவிட்டேன்…” என்று பழைய நினைவுக்குச் சென்ற சீமா, மீண்டும் சிரஜ் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.
“எங்கள் நட்பிற்கு பிறகு, டாக்சி டிரைவர் சிரஜ் அடிக்கடி எனக்காக வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டுவர ஆரம்பித்தான். இறுதியில் எப்படியோ என்னை அவனது காதல்வலையில் வீழ்த்தி விட்டான்.
நாங்கள் இருவரும் ஒன்றாகக் காரில் சுற்றித் திரிந்தோம். ஒருநாள் அவன் என்னை அவனது வீட்டிற்குத் திடீரென்று அழைத்துச் சென்றான். நான் ஒரு விலைமாது என்பது அவனது குடும்பத்தினருக்குத் தெரியாது. சிரஜ் என்னை காதலிப்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்! அவர்கள் என்னை வரவேற்று உபசரித்தார்கள். ஆனாலும் நான் உஷாரானேன்.
என்னை இந்த தொழிலில் இறக்கி விட்ட முதல் காதலனான புரோக்கரிடம் கிடைத்த அனுபவத்தால், என்னை காதல் என்ற பெயரில் யார் நெருங்கினாலும் அவர்களிடமிருந்து விலக வேண்டும் என்ற உறுதியை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டேன். அவனது வீட்டிற்கு போனாலும் அவனிடம் என் வாழ்க்கையை ஒப்படைக்காமல் அவனை என் தொழிலுக்கு தேவையானவனாக மட்டுமே வைத்துக்கொண்டேன். ஆனால் அவனோ என்னை விழுந்தடித்து காதலித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து காதல் விஷயத்தில் விலகி இருப்பதையும் புரிந்துகொண்டான்.
அன்று திடீரென்று என் வீட்டிற்குள் வேகமாக புகுந்த அவன், தனது மணிக்கட்டினை பிளேடால் அறுத்துக்கொண்டு என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தான். நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவனது ரத்தத்தை தொட்டு, எனது நெற்றியில் ரத்தத்திலகமிட்டு தனது காதலை என்னிடம் பகிரங்கமாக வெளிபடுத்தினான். அப்போதுதான்அவனது காதலில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. இருப்பினும் கிராமத்தில் உள்ள என் அம்மாவின் அனுமதியை பெற்ற பின்பே நான் சிரஜைத் திருமணம் புரிந்து கொண்டேன்!”- என்று கூறிக்கொண்டே ஏக்க பெருமூச்சு விடுகிறாள், சீமா. இவர்கள் திருமண வாழ்க்கை 13 வருடங்கள் நீடித்திருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை.
“அவனோடு வாழ்ந்த காலம் ரொம்ப இனிமையானவை. எனது நடைஉடை பாவனைகளை மாற்றினான். என்னை முழு குடும்பத்தலைவியாக ஆக்கினான். என்னை போன்ற விலைமாதுவுக்கு அப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமையும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. 13 ஆண்டுகள் மும்பை புறநகர் பகுதியில் சிரஜின் சொற்ப வருமானத்திலும், எனது பழைய சேமிப்பிலுமாக வாழ்க்கையை ஓட்டினேன்.
எனது சேமிப்பு முழுவதும் கரைந்துபோனதும் எதிர்காலம் கேள்விக்குறியாவதை உணர்ந்தேன். சிரஜின் சொற்பவருமானம் எங்களது குடும்ப வாழ்க்கைக்கு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக ஆனது. அதனால் மீண்டும் பழைய தொழிலுக்கே வந்து விட்டேன்…”
இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
“இன்றும் சிரஜ் என்னிடம் வந்து இந்த தொழிலை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடும்படி கட்டாயபடுத்துகிறான். ஆனால் எனக்குத்தான் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. அவன் அன்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நான் நிம்மதியாக வாழ பணமும் எனக்கு முக்கியம்…”-என்று கூறி, விடை தெரியாத கேள்விபோல் தன் வாழ்க்கை இருப்பதை உணர்த்துகிறாள், சீமா.
***
விலைமாதுவின் வாழ்க்கை இப்படி என்றால், விலைமகனாகிவிட்ட இன்னொரு வாலிபன் கதை இன்னொரு விதத்தில் அதிர்ச்சி தரக்கூடியது.
வசதி படைத்த பெண்களின் உடல் பசியை தீர்க்கும் இவனும் அதே மும்பையில்தான் வசிக்கிறான். `விலை போகும்’ தன்னை பற்றி அவனே விளக்குகிறான்.
“தகவல் தொழில்ட்பத்துறையில் வேலை பார்த்தேன். அதன் வீழ்ச்சி எனக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் இப்போது நான் பார்க்கும் வேலை முன்பைவிட அதிக வருமானத்தை எனக்கு
தந்துகொண்டிருக்கிறது. ஒரே நாள் நான் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். என் நண்பர்கள் வேலை பார்த்து ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை நான் ஒரே வாரத்தில் சம்பாதிக்கிறேன்!
என்னை படுக்கையறையில் பகிர்ந்துகொண்ட முதல் பெண் என்னால் மறக்க முடியாதவள். காட்டுமிராண்டித்தனமாக என்னிடம் நடந்துகொண்டாள். அந்த இரவு முடிந்து பகல் உதயமானபோது அந்த அறையில் என்னுடன் படுத்திருந்த அந்த பெண்ணை காணவில்லை. ஆனால் அந்த அறையில் எனக்காக ஒரு கவரில் ரூ.2000 வைக்கபட்டிருந்தது! இப்படி ஒரு தொழில் இருப்பது அப்போதுதான் எனக்கே தெரிந்தது. என் சந்தோஷத்துக்கு பணமும் கிடைத்த அந்த நிமிடம் முதல் இதுதான் என் தொழில் என்று முடிவு செய்தேன்.
என்னை முதல் நாள் பயன்படுத்திய பெண், பின்பு அவளுடைய தோழிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் மும்பைநகரத்தின் மிகபெரிய பணக்காரிகளாக இருந்ததால் எனக்கு பெருந்தொகை கிடைத்தது.
விரைவில் இத்தொழிலில் எனக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் குவிந்ததும், நான் என்னுடன் மேலும் நான்கு பேரை இணைத்துக்கொடு ஐந்துபேராக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி எங்கள் தொழிலை தொடர்கிறோம். மும்பையின் மிகபெரிய பணக்கார பெண்களின் படுக்கையறைகளின் மூடிய கதவுகளுக்குபின்னால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கேட்டால் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்! என்னுடைய இத்தொழிலில் சகல வித்தைகளையும் நான் கற்றுக்கொண்டேன்.
பிற தொழில்களில் உள்ளது போலவே எங்களது தொழிலிலும் சில விதிமுறைகள் உண்டு. பாதுகாப்பு உறை இன்றி எந்த பெண்ணைம் நெருங்க விடுவதில்லை.
கிட்டத்தட்ட நான்காண்டுகாலமாக இத்தொழிலில் இருக்கும் நான், அழகான சில பெண்களுடனும், அதேசமயம் சில அவலட்சணமான பெண்களுடனும் இருந்திருக்கிறேன். மற்றவர்களால் நம்ப முடியாத பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவை மூடி மறைக்கபடவேடியவை. அவை என்னை தரந்தாழ்ந்த நிலைக்குள் ஆட்படுத்தி எனக்கு ஆனந்தம் அளிப்பவை!”- என்று கூறிக்கொண்டிருந்த அவர், வாடிக்கையாளரான ஒரு பெண் விலை உயர்ந்த காரில் வருவது தெரிந்ததும் நமக்கு விடைகொடுத்துவிட்டு, அந்த காரில் ஏறி பறக்கிறார்.