Home ஆரோக்கியம் உளவியல் மன ஆரோக்கியம் என்றால் என்ன?

மன ஆரோக்கியம் என்றால் என்ன?

26

மன ஆரோக்கியம் என்பது, நமது வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளை சமாளிக்கவுமான நமது திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது நாம் உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களை சமாளிக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு பல கூறுகள் பங்களிக்கின்றன:
சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு
உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள்
நிதிநிலைகள்
சமூக ஈடுபாடு
மனஅழுத்தத்தை நீங்கள் சமாளிக்கும் விதம்
உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம்
குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு நாம் முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது “ஊக்கம் குன்றியதாக” (“down”) உணர்வது போன்றவற்றை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்கிறோம். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர், இத்தகைய நேரங்களை சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.
புதிய நாட்டுக்குக் குடிவரவு செய்யும்போது நல்ல மன ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதாவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுவது, நிதிநிலை உறுதிப்பாட்டை இழப்பது, புதிய மொழியைக் கற்பது, புதிய பண்பாட்டுக்கு தகவமைத்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறனுடையவராக நீங்கள் இருக்க வேண்டும்.

Previous articleகரு உண்டாவதில் சிக்கல்!!
Next articleஉடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்