Home ஆரோக்கியம் உளவியல் மனநல ஆலோசகர்கள் சொல்கிறார்கள்

மனநல ஆலோசகர்கள் சொல்கிறார்கள்

22

ஆபாச படங்களை தம்பதிகள் சேர்ந்து பார்ப்பதும், காதலர்கள் சேர்ந்து பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. அதனால், அதுபோல் தங்கள் அந்தரங்கத்தையும் சிலர் கூச்சமில்லாமல் படம் பிடிக்கிறார் கள்.

என்னிடம் கவுன்சலிங்குக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர வயது தம்பதிகளான அவர்கள் எப்போதும் பிசியாக தங்கள் வேலை யிலே மூழ்கிகிடப்பவர்கள். தங்கள் சக்தியை எல்லாம் வேலையிலே செலவிட்டுவிட்டு, சக்தியற்றவர்கள்போல் வீடு திரும்புவார்கள். அத னால் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற நிலைக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை சுருங்கிவிட்டது.

அதனால் இருவரும் கலந்துபேசி, தங்கள் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்வதற்காக ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்றார்கள். அங்கு அறையில் தங்கியிருந்தபோது, சந்தோஷமான மூடில் எப்போ தும் தாங்கள் பார்த்து மகிழ, தங்கள் உறவை படம்பிடித்திருக் கிறார்கள். அதை லேப்டாப்பில் போட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

திடீரென்று லேப்டாப் பழுதாகிவிட, அந்த படத்தை தங்களுக்கு தெரிந்த விதத்தில் அழித்துவிட்டு சர்வீஸ்க்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சர்வீஸ் செய்தவர், அழித்த படங்களை மீண்டும் எடுத்து பார்த்ததோடு, அதை தன் நண்பர்களுக்கும் அனுப்பிவைத் திருக்கிறார். அதெல்லாம் இந்த தம்பதிக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது.

திருமணமான இன்னொரு பெண் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதால், அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். ஆனால் திருமணமான புதிதில் இருவரும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் அனைத்தையும் அவள் சம்மதத்தோடு, கணவர் படம்பிடித்திருக்கிறார். அவள் என்னிடம், `நான் விவாகரத்து பெற்ற பின்பு, எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தால், அந்த பழைய அந்தரங்க காட்சிகளை இந்த கணவர் வெளியிட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது’ என்றார். பெண்களால் கணவரையும் நம்ப முடிவதில்லை. காதலரையும் நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தரங்கத்தை படம்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது..” என்று கூறும் பிரீத்தி மனோகர், காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் அந்தரங்கம் படமாவதை எப்படி தடுக்கவேண்டும்? என்றும் ஆலோசனை சொல்கிறார்..

“ஆண்கள் முதலில் பிரண்டாக பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள். அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள்.

காதல் ஓ.கே. ஆனதும் சினிமா, பீச் என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாச படங் களை பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிடவேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு, பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும். படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

இதை தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்லவேண்டும். அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக் கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும், நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தை குறைக்கலாம்..” என்கிறார்.