Home காமசூத்ரா பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ ஆண் பெண் ‘புணர்ச்சி விதிகள்’

பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ ஆண் பெண் ‘புணர்ச்சி விதிகள்’

89

ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?

நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான

பிறப்புறுப்பின் ரகசியம்.

மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சா ர்ஜ் என்பது Ovelation Period என் கிறோம். சிலருக்கு அந்தகாலத்தி ல் வெள்ளைபடுதல் எட்டாவது நா ளிலேயேகூட ஆரம்பித்துவிடலா ம். சிலருக்குபதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்ம ல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்ப டுதல் இருந்தால்தான் ஒருபெண்ணால் கருத்தரிக்க முடியும். கரு முட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கி றோம்.

மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும்போது வெள்ளை திரவம் வெ ளிப்படும். இதையும் நார்மல் என்கி றோம். இது பல பெண்களுக்கு தெரிவ தே இல்லை. இதற்காக பயப்படும் பெ ண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர் கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள் ளைப்படுதலே ஆகும்.

அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவ தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்க ளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இரு க்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறு கிறோம். இதையே பலர் மாதவிலக்கு வரு வதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மே லும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டா லும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.

சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டுவயது, ஒன்பதுவயதில் வெள்ளைப்படுகிறது . இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல் லை. சிலருக்கு பூச்சுத்தொல்லை அதிகமாக இரு ந்தாலும் இம்மாதிரி வெள்ளைப்படும். இதை நு ண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்ப டுத்தி விடலாம்.

ஆண் பெண் ‘புணர்ச்சி விதிகள்’ பற்றி தமிழ் இலக்கணத்தில் . . .தமிழ் இலக்கணம் படித்தோர் ‘புணர்ச்சி விதிகள்’ என்றொரு அதிகாரத்தைப் படி த்திருப்பர். மொழியிலுள்ள எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருள் தருவதை இலக்கணம் இத்தலைப்பில் சுட்டுகிறது.

ஆண், பெண் உணர்ச்சி வழியே நடத்தும் கிளர்ச்சியையும் மருத்துவ நூல்கள் புணர்ச்சி என்கின்றன. மனித இனம் தழைத்தோங்க இந்த உணர்ச்சிப் புரட்சி அவசியம் தேவை. இதன் விதிமுறைக ளை சிதித்ஸாதிலகம், பாவப்பிரகாசம், அஷ்டாங்கஸங்கிரஹம், ஷேமகுதூஹ லம், ஸாஸ்ருதஸம்ஹிதா, காச்யஸம்ஹிதா, கல்யாணகாரகம், சரகசம்ஹிதா, பேலசம் ஹிதா, அஷ்டாங்க ஹிருதயம் முதலிய

பண்டைய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

எப்போது புணர்ச்சி :

மனிதனுக்கு எப்பொழுதும் உடற்புணர் ச்சியில் விருப்பமுண்டாகிறது. அவன், இரவில்தான் தன் மனைவியுடன் புண ரவேண்டும். பகலில் ஒருபோதும் பெ ண்ணை நுகரக் கூடாது. ஆண் இருபத் தைந்தாவது வயதிலும், பெண் பதினாறாம் வயதிலும்தான் முற்றி லும் பெறப்பட்ட சக்தியுடையவர்கள் ஆகிறார்கள்.

எங்கே புணர்ச்சி ? :

மிகவும் மறைவானதும், அழகானதும், இனிமையான பாடலுடன் கூடியதும், நறு மணமுடையதும், இதமான காற்றுள்ளது மான இடத்தில் கூடவேண்டும். பெரியோர் அருகில் இருக்கும்போது, வெளிப்படையா னதும், வெட்கத்தை அளிக்கக்கூடியதும், துன்பத்திற்கு ஏதுவான சொற்கள் கேட்கக் கூடியதுமான இடங்களில் எப்போதும் மனைவியுடன் சேரக் கூடாது.

புணர்ச்சிக் கேற்றவ(ள்)ன் :

குளித்து முடித்தவனும், அமைதி கொண்ட மனத்தினனும், நறும ணம் பூசியவனும், தூய்மையான ஆடை உடுத்தி, ஆண்மைக்கேது வான பொருட்களை உண்டவனு ம், மனைவியிடம் மிகுந்த காதல் கொண்டவனும், மிக்க மன எழுச் சி கொண்டவனுமே பெண்ணுட ன் கூடத் தகுதியானவர்கள்.

புணர்ச்சியின் பின்னே :

கூடிய பிறகு குளித்து நறுமணப் பொருளைப் பூசுதல், குளிர்ந்த காற்றைக் கிரகித்தல், நீர் சேர்த்த அன் னத்தைப் புசித்தல், கற்கண்டினால் செய்த சிற்றுண்டியைச் சுவைத்தல் மு தலியவற்றைச் செய்யவேண்டும். இ வைகள் ஆணின் சுக்கிலத்தை விரை வாக மீண்டும் உற்பத்தி செய்து விடு கின்றன.

புணர்ச்சியின் பின் ஆகாதவை :

மேற்கூறியவற்றைச் செய்யாதவன் ஆயுள், ஓஜஸ் (உடலின் ஏழு தாதுக்கள்) விந்து முதலியவற்றை இழ க்கிறான். இதனோடு ஆண் குறியில் நோய்களையும், வாயுவின் கிளர்ச்சி யையும் சந்திக்கிறான். இன்னும், நெரு ப்பினருகில் வேலை செய்வதைத் தவி ர்க்கவும், தேகப் பயிற்சி, துக்கம் இவற் றைக் கைவிடவும் வேண்டும்.

புணர்ச்சியின் காலம் :

மனிதன் எல்லா ருதுக்களிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீதம் பெண்ணைக் கூடலாம். கோடையில் மட்டும் பதினைந்து நா ட்களுக்கு ஒருமுறைதான். ஆடியில் புணர்ச் சியைக் கைவிட வேண் டும்.

அதிக புணர்ச்சி ஆகாது :

கால நியமங்களை மீறி பெண்ணைச் சேர்பவ னுக்கு தலைச்சுற்றல், உடல் வாட்டம், தொ டையில் வலு குறைவு, தாதுக்கள் அழிவு இ வை தோன்றும். அகால மரணம்கூட அழைப் பதுண்டு. மேலும், வயிற்றுவலி, இருமல், ஜு ரம், சுவாச நோய், இளை ப்பு, சோகை, வலி ப்பு இவையும் வந்து வாட்டும்.

அளவான புணர்ச்சியின் பலன் :

பெண்களிடம் அளவுடன் கட்டுப்பாட்டை கடை ப்பிடிப்பவன் ஞாபக சக்தி, தாரணா சக்தி, ஆயுள், நோயின்மை, வளர்ச்சி, திறமை, புகழ் இவைக ளைப் பரிசாகப் பெறுகிறான். இளமை வளர்ந்து ஓங்க, கிழட்டுத்தனம் ஒதுங்கி வழிவிடும்.

பதினாறாயிரம் பேரை தசரதன் புணர்ந்த காலத் திலேயே ஒருத்தியோ டு மட்டுமே வாழ முற்பட்ட ராமன் கதாபாத் திரமும் இந்திய சமுதாயத்தில் உண்டு. மனிதகுலம் நலம் பெற ஒழுக்கம் சார்ந்த வாழ்வையும், ஒரு வனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும் தமிழ் மறையான திருக் குறளும் வலியுறுத்துகிறது. இன்று பல வித நோய்ச் சிக்கல்க ள்கூட (எய்ட்ஸ்) இந் த உயரிய பண்பால் விடைபெறும் என்பது திண்ணம்.