Home வீடியோ பெண் உறுப்பு நோய்கள்

பெண் உறுப்பு நோய்கள்

110

images31) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2 பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உற வின்போது வலி ஏற்படும்.

இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்..

மாதவிலக்கு நின்ற பின்னர்:

ஒரு பெண் மணிக்கு மாத விலக் கு நின்ற (மெனோபாஸ்) பின்னர் பாலியல் உணர்ச்சி குறைந்து விடும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந்தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபட லாம். மாதவிலக்கு நின்றபின் உடல் உறவில் ஈடுபடுவ தால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவிலக்கு நின்று போனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசமயம் உடல் உறவின் போது எரிச்சல் இருக்கும். இதற்கு இன்று அதி நவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமான இன்பம் பெற இவர்கள் மெனோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ் மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று.

நோயும், செக்ஸும்:

சில வகை பொதுவான நோய்களான காச நோய், புற்று நோய், இருதய நோய், சிறு நீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்து விடும்.